தமிழக வெற்றிக்கழகத்தின் சிறப்பான செயல்திறனுக்கு வாழ்த்துகள் – பிரதமர் மோடி..
பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் எப்போதும் முன்னிலையில் இருப்போம் என குறி[ப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் சுமார் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் எப்போதும் முன்னிலையில் இருப்போம்.
தமிழக வெற்றிக்கழகத்தின் சிறப்பான செயல்திறனுக்கு வாழ்த்துகள். தமிழகத்தின் முன்னேற்றத்தை மேலும் வளர்க்க மத்திய அரசு எந்த முயற்சியையும் தவறவிடாது,” என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் முக்கியமாக பார்க்கும்போது, இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் திராவிடக் கட்சிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. சுமார் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திமுக இரண்டாவது இடத்திலும், அதிமுக மூன்றாவது இடத்திலும் உள்ளது.
முக்கியமாக, திமுகவின் பல அமைச்சர்கள் — குறிப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆர். காந்தி, ஆர். ராஜேந்திரன், கீதா ஜீவன், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, டி.ஆர்.பி. ராஜா, அன்பில் மகேஷ், எஸ்.எம். நாசர், சாமிநாதன், அன்பரசன், மா. சுப்பிரமணியன், முத்துசாமி, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பலரும் தோல்வியடைந்துள்ளனர். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கு அடுத்ததாக யாரின் ஆதரவை பெறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த சூழலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.