Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Parasakthi: பராசக்தி படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய ரவி மோகன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Parasakthi Movie Update: இயக்குநர் சுதா கொங்காராவின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் திரைப்படம்தான் பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் நிலையில், வில்லன் வேடத்தில் ரவி மோகன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை ரவிமோகன் தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Parasakthi: பராசக்தி படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய ரவி மோகன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ரவி மோகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Nov 2025 19:01 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரவி மோகன் (Ravi Mohan). இவர் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என புதிய அவதாரமும் எடுத்துள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனமான ரவிமோகன் ஸ்டூடியோஸ் (Ravi mohan Studios) நிறுவனத்தின் கீழ் நடிகர் யோகி பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கிவருகிறார். படத்தை இயக்குவதோடு மற்ற இயக்குநர்களின் படங்களிலும் இவர் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் ப்ரோகோட், கராத்தே பாபு, ஜீனி மற்றும் பராசக்தி (Parasakthi) என பல படங்கள் உருவாகிவருகிறது. அதில் இவர் வில்லனாக நடிக்கும் படம்தான் பராசக்தி. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியிருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ராணா டகுபதி போன்ற பிரபல நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 அக்டோபர் 20ம் தேதியில் தீபாவளியுடன் நிறைவானதை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் ரவி மோகன் பராசக்தி படத்தின் டப்பிங் (Dubbing) பணியை தொடங்கியுள்ளார். இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மற்றுமுள்ள நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணியை ரவி மோகன் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கண்ணு முழி பாடல் உண்மையில் அந்த படத்திற்காக பண்ணது- உண்மையை உடைத்த வெற்றிமாறன்!

ரவி மோகன் டப்பிங் குறித்து பராசக்தி படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகர் ரவி மோகன் இந்த பராசக்தி படத்தில் ஒரு முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இப்படம் கடந்த 1960ம் ஆண்டில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான கதையில் உருவாகியுள்ளதாம். இந்த் படத்தில் நடிகை ஸ்ரீலீலா தெலுங்கு பெண்ணாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அனுராக் காஷ்யப் நடிப்பில் Unkill_123 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தின் தீம் பாடலாக இருந்தாலும் சரி, முதல் பாடலாக இருந்தாலும் சரி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இதில் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலாவின் ஜோடியும் நன்றாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதியில் வெளியாகிறது. தொடர்நது இப்படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.