The Girlfriend: ரூ1 கோடி பட்ஜெட்.. ராஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பாடல்!

he Girlfriend Movie Song Scrapped Controversy: நடிகர் ராஷ்மிகா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட். இப்படத்திலிருந்து சுமார் ரூ 1 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முக்கிய பாடலை படக்குழு நீக்கியுள்ளதாம்.

The Girlfriend: ரூ1 கோடி பட்ஜெட்.. ராஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பாடல்!

ராஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படம்

Published: 

02 Nov 2025 18:47 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நாயகியாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரின் நடிப்பில் இறுதியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). இயக்குநர் சேகர் கம்முலாவின் (Sekar Kammula) இயக்கத்திலும், தனுஷின் முன்னணி நடிப்பிலும் இப்படமானது கடந்த 2025 ஜூலை மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தனுஷ் ஒரு பிச்சைக்காரனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், தமிழில் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படவில்லை. இந்த படத்தை அடுத்ததாக இவர் பாலிவுட்டில் தம்மா (Thamma) என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படமும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான ராகுல் ரவீந்திரனின் (Rahul Ravindran) கூட்டணியில் இவர் நடித்துவந்த படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend)

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா உச்ச கதாநாயகியாக நடித்திருக்கும் நிலையில், இவருக்கு ஜோடியாக நடிகர் தீக்ஷித் ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தில் முதல் முதலில் வெளியான பாடல்தான் நதிவே (Nadive). இப்பாடலானது ரூ 1 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்ததாக கூற்பட்டநிலையில், இப்பாடலை படத்திலிருந்து படக்குழு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சுந்தர் சி – ரஜினிகாந்தின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது தெரியுமா? கசிந்தது தகவல்!

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட நதிவே பாடல் பதிவு :

இந்த பாடல்தான் இப்படத்தின் முதல் சிங்கிளாக வெளியாகியிருந்த நிலையில், தற்போது வரையிலும் ரசிகர்களாக ரசிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இப்பாடல் சுமார் ரூ 1 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் காட்சிகளில் நேர குறைப்பின் காரணமாக இப்பாடலை நீக்குவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த தகவல் உண்மை என்றால் வரும் 2025ம் நவம்பர் 7 ஆம் தேதியில் திரைக்கு வரும் நிலையில், அது குறித்து தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிரது.

இதையும் படிங்க : இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்… பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரே நாளில் நுழைந்த 4 வைல்கார்ட் போட்டியாளர்கள்!

இந்த தி கேர்ள்ஃபிரண்ட் திரைப்படமானது முற்றிலும் மாறுபட்டக் காதல் கதை மற்றும் பெண்ணியம் சார்ந்த காதல் தொடர்பான மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் இயக்குனர் ராகுல் ரவீந்திரனும்சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இவரின் சிறப்பு வேடத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவை நடிக்க வைக்க நினைத்ததாகவும், அவருக்கு விருப்பமில்லாத நிலையில், தான் அந்த வேடத்தில் நடித்ததாகவும் ராகுல் ரவீந்திரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது