ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பரான அப்டேட் இதோ

Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தி கேர்ள் ஃப்ரண்ட். இந்த நிலையில் இன்று மாலை இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி எப்போது என்பது குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட உள்ளது.

ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பரான அப்டேட் இதோ

ராஷ்மிகா மந்தனா

Published: 

04 Oct 2025 11:19 AM

 IST

கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதன்படி சாவா, சிக்கந்தர் மற்றும் குபேரா ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சாவா படம் ரூபாய் 1000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. இது ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலி சாதனைப் படைத்து வந்ததால் அவரை பாக்ஸ் ஆபிஸ் குயின் என்று சினிமா வட்டாரங்களில் அழைக்கத் தொடங்கினர். தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தி மற்றும் தெலுங்கு என 4 படங்களில் நடித்து வருகிறார். இதில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள படம் தி கேர்ள் ஃப்ரண்ட்.

தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்தப் படத்தை இயக்குநர் ராகுல் ரவீந்த்ரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த கேர்ள் ஃப்ரண்ட் படத்தில் நாயகியாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர் தீக்‌ஷித் ஷெட்டி நாயகனாக நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்று 04-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு மாலை 3.06 நிமிடத்திற்கு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் – 15 ஆண்டுகளை நிறைவு செய்தது எந்திரன் படம்!

தி கேர்ள் ஃப்ரண்ட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் நாயகன் படம்!