Kaantha : துல்கர் சல்மானின் ‘காந்தா’.. முக்கிய ரோலில் இணையும் டோலிவுட் நடிகர்.. யார் தெரியுமா?
Kaantha Movie Update : மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் துல்கர் சல்மான். இவரின் முன்னணி நடிப்பில் பிரம்மாண்ட கதைக்களத்தில் உருவாகிவரும் படம் காந்தா. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காந்தா திரைப்படம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) . இவர் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் (Mammootty) மகன் ஆவார். இவர் தனது தந்தையைப் போல சினிமாவில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar) . இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் வெளியான இப்படமானது பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வெற்றி படமாக அமைந்திருந்தது. இந்த படத்திற்காகத் தெலுங்கில் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார் துல்கர் சல்மான். இந்நிலையில் இவரின் நடிப்பில் புதிதாக உருவாகிவரும் படம்தான் காந்தா (Kaantha) . இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கி வருகிறார். இந்த படத்தை வெபேரர் பிலிம்ஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் போன்ற இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகிறது.
நடிகர் ராணா டகுபதியும் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வரும் நிலையில், இந்த காந்தா படத்தில் அவரும் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை தினத்தந்தி செய்தி இணையதளத்தில் பகிர்ந்துள்ளது.
துல்கர் சல்மான் வெளியிட்ட காந்தா திரைப்பட எக்ஸ் பதிவு :
Sharing one more poster cause we absolutely cannot contain our excitement ! 🤗🕺🏻@ranadaggubati how special is this ! Cannot believe we actually made it happen 🤗🤗❤️❤️#kaantha #DulquerSalmaan #RanaDaggubati #SpiritMedia #DQsWayfarerfilms#SelvamaniSelvaraj @bhagyasriiborse… pic.twitter.com/95sTVo5kJX
— Dulquer Salmaan (@dulQuer) February 3, 2025
கந்தா திரைப்படத்தின் கதைக்களம் :
இந்த காந்தா படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படமானது தெலுங்கு மற்றும் மலையாள மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான் முன்னணி நாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்து வருகிறார்.
இவர் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காந்தா படமானது 80ஸ் கதைக்களத்துடன் உருவாகிவருகிறதாம். இப்படமானது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.
காந்தா திரைப்படத்தின் ரிலீஸ் :
நடிகர் துல்கர் சல்மானின் இந்த திரைப்படமானது மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்த படமானது பான் இந்திய மொழி படமாகத் தயாராகிவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உருவாகிவருகிறது. துல்கர் சல்மானின் நடிப்பில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் படமானது பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து இந்த படமும் உருவாகிவரும் நிலையில், இந்த படமானது வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் வெளியாகும் என கூறப்படுகிறது. லக்கி பாஸ்கர் படத்தைப் போல இப்படமும் வெற்றியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.