அவ்வை சண்முகி படத்திற்காக கமல் ஹாசன் அவ்வளவு மெனக்கெட்டார் – ரமேஷ் கண்ணா

Ramesh Khanna talks about Kamal Haasan effort for Avvar Shanmugi: நடிகர் கமல் ஹாசன் சினிமாவில் பல முயற்சிகளை செய்து சாதனைப் படைத்துள்ளார். தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் அவ்வை சண்முகி படத்திற்காக எவ்வளவு மெனக்கெட்டார் என்பது குறித்து ரமேஷ் கண்ணா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவ்வை சண்முகி படத்திற்காக கமல் ஹாசன் அவ்வளவு மெனக்கெட்டார் - ரமேஷ் கண்ணா

அவ்வை சண்முகி

Published: 

15 Mar 2026 19:16 PM

 IST

தமிழ் சினிமாவில் உலக தரம் வாய்ந்த பல விசயங்களை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலமானவர் நடிகர் கமல் ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அவ்வை சண்முகி. இந்தப் படத்தை இயக்குநர் ரவிக்குமர் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

அதன்படி நடிகர்கள் மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ், ஹீரா, ராணி, குழந்தை அன்னே, கவிதாலயா கிருஷ்ணன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுராம், கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த், நீலு, கனல் கண்ணன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அவ்வை சண்முகி படத்திற்காக கமல் ஹாசன் அவ்வளவு மெனக்கெட்டார்:

இந்த நிலையில் இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராமேஷ் கண்ணா பேட்டி ஒன்றில் கமல் ஹாசன் அவ்வை சண்முகி குறித்து பேசியது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, அவ்வை சண்முகி படத்துல கமல் ஹாசன் சார்க்கு தினமும் 4மணி நேரம் மேக்கப் தினமும் ஷேவ் பண்ணனும், 55 நாள் காலையில 2 மணிக்கு எழுந்து கிளம்பி, 5 மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்து 9 மணி வரைக்கும் மேக்கப் போடுவாரு, மதியம் 3 மணிக்கு மேக்கப் கலைச்சிட்டு சாப்பிடுவாரு என்றும் இந்தப் படத்திற்காக அவர் மிகவும் மெனக்கெட்டார் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

Also Read… Yogi Babu: AA22 படத்தில் எனக்காக அல்லு அர்ஜுன் சார் செய்த விஷயம் – நெகிழ்ச்சியாக பேசிய யோகி பாபு!

இணையத்தில் வைரலாகும் ரமேஷ் கண்ணா பேச்சு:

Also Read… டொவினோ தாமஸ் நடிப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது காட்டுச் செண்பகம் வீடியோ பாடல்!

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்