ரஜினிகாந்தின் கூலி படத்தின் சிக்கிடு பாடலின் BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு

Chikitu Song BTS Video: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்த்தில் இருந்து தொடர்ந்து அப்டேட்களையும் வீடியோக்களையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் சிக்கிடு பாடலின் ஷூட்டிங் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்தின் கூலி படத்தின் சிக்கிடு பாடலின் BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு

சிக்கிடு பாடலின் BTS வீடியோ

Published: 

28 Jun 2025 20:34 PM

 IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Actor Rajinikanth) நடிப்பில் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்து உள்ளார். படம் வெளியாக இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கிடு வைப் என்ற பாடலைப் படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் பாடலில் அனிருத் நடனம் ஆடி இருந்தது ரசிகர்களிடையே மேலும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்த நிலையில் இந்த சிக்கிடு வைப் பாடலின் படப்பிடிப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

சிக்கிடு பாடலின் BTS  வீடியோவைப் வெளியிட்ட படக்குழு:

ரஜினிகாந்தின் நடிப்பில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூலி படம்:

வேட்டையன் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்த நடிகர் ரஜினிகாந்த் இந்த கூலி படத்தில் கேங்ஸ்டராக நடித்து இருக்கிறார். இவருடன் பான் இந்தியாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் இந்தப் படத்தில் நடித்து இருந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பொதுவாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ஆக்‌ஷன் வன்முறைகள் அதிகமாக இருக்கும். அப்படி இந்தப் படமும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அமீர் கான், உபேர்ந்திரா ராவ், சௌபின் ஷாகிர், நாகர்ஜுனா ஆகியோர் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவம் குறித்து தொடர்ந்து பேட்டிகளில் பேசி வருகின்றனர். அதில் நடிகர் நாகர்ஜுனா தான் நெகட்டிவ் ரோலில் நடிப்பது குறித்து முன்னதாக பேசியிருந்தார்.

அதேபோல நடிகர் அமீர் கான் தனக்கு படத்தில் 15 நிமிட காட்சிகள் இருக்கும் என்றும் அதில் ரஜினிகாந்துடன் நடித்து இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார். அந்த காட்சிகளை ரசிகர்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Mamitha Baiju: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!
Harish Kalyan: எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
Parasakthi: இன்னும் 100 நாட்களில் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் இதோ!
இட்லி கடை படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க!
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ரவி மோகன்!
திருமண உறவு குறித்து அழகாக பேசிய இறுகப்பற்று படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு…!