கூலி படத்தின் 2-வது பாடல்… இன்று மாலை வெளியாகும் சூப்பர் அப்டேட்!
Coolie Movie Update: கோலிவுட் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பெரிய படம் கூலி. இந்தப் படம் குறித்த அப்டேட்களை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகின்றது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் தற்போது திரையரங்குகளை அதிரவைக்க காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக இயக்கிய படங்கள் அனைத்தும் ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்து இருக்கும் நிலையில் இந்தப் படமும் அப்படிதான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல ஆண்டுகளுக்கும் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வில்லனிசத்தை அனைவரும் பார்ப்பார்கள் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தது ரசிகர்களிடையே படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் தொடர்பான அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இந்தப் படத்திற்கு இசையமைக்கும் நிலையில் முன்னதாக படத்தில் இருந்து சிக்கிடு வைப் என்ற பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்தப் பாடலில் இசையமைப்பாளர் அனிருத் நடனம் ஆடி இருந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அந்தப் பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே பல மில்லியன் வியூஸ்களை பெற்று இணையத்தில் ட்ரெண்டிங்கிள் இடம் பிடித்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது இன்று 09-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு மாலை 6 மணிக்கு இரண்டவது சிங்குள் குறித்த அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
Also read… ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்த நடிகர் மோகன்லால்? வைரலாகும் தகவல்
கூலி படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தல பதிவு:
It’s time to groove! 💃🏻😎 #Coolie Second Single Announcement Today 6 PM🥳#Coolie worldwide from August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off… pic.twitter.com/KHWfDz9gMt
— Sun Pictures (@sunpictures) July 9, 2025
Also read… Idly Kadai :’இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!
கூலியில் கேமியோ பன்னும் நடிகை பூஜா ஹெக்டே:
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ பதிவில் நடிகை பூஜா ஹெக்டேவின் புகைப்படம் இருப்பது தெரிகிறது. இதனால் முன்னதாக வெளியான தகவலின் படி நடிகை பூஜா ஹெக்டே இந்த கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறார் என்ற தகவலின்படி அவரது பாடலாக இது இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.