Rajinikanth : தியேட்டரில் படம் பார்க்க மாறுவேடம்.. அப்போது நடந்த சம்பவம்.. ரஜினிகாந்த் பேச்சு!

Rajinikanth About Disguise Experience : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவையும் கடந்து இந்தியாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் மாறுவேடத்தில் திரையரங்கு சென்று ரசிகர்களிடம் மாட்டிக்கொள்ள இருந்தது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

Rajinikanth : தியேட்டரில் படம் பார்க்க மாறுவேடம்.. அப்போது நடந்த சம்பவம்.. ரஜினிகாந்த் பேச்சு!

ரஜினிகாந்த்

Published: 

02 Jul 2025 08:06 AM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth ) என்றால் ஆள் ஓவர் இந்தியா அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் அதிகம். இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 170 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் இப்படத்தை எடுத்ததாகவும் , புதிய படங்களில் நடித்துவருகிறார். இவர் சினிமாவில் இயக்குநர் கே.பாலச்சந்தரால் (K. Balachander) கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். கடந்த 1975ம் ஆண்டு வெளியான “அபூர்வ ராகங்கள்” (Apoorva Raagangal) படத்தின் மூலம் சினிமாவில் நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் ரஜினிகாந்த். தனது முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் சிலரால் விமர்சிக்கவும் பட்டார். தமிழில் படங்களில் ஹீரோ மற்றும் வில்லன் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றுத்தான் சூப்பர் ஸ்டாராக தற்போது இருந்து வருகிறார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வேட்டையன் (Vettaiyan) . இந்த படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இப்படமானது வெளியானது. இந்த படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. மேலும் இப்படத்தின் ரிலீஸின் போது பல நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இப்படங்களைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் கூலி மற்றும் ஜெயிலர் 2 என இரு படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், மாறுவேடம் போட்டு திரையரங்கிற்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும்போது, ரசிகர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க பட்ட பயங்கரமான அனுபவம் பற்றிப் பேசியுள்ளார். அதை பற்றிப் பார்க்கலாம்.

 ரஜினிகாந்த் பேச்சு :

முன்னதாக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த்திடம் , நீங்கள் தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்று படம் பார்ப்பீர்களாமே ? என்று கேள்வி கேட்டார். அதற்கு ரஜினிகாந்த், “ஆமாம் நான் அவ்வாறு சென்று பல படங்களைப் பார்த்திருக்கிறேன். ஒருமுறை இதுபோல மாறுவேடத்தில், பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கிற்குச் சென்றிருந்தேன். அப்போது படத்தைப் பார்த்துவிட்டு வீடி திரும்பக் கிளம்பியபோது. என்னைப் பின்னால் இருந்து யாரோ ஒரு ரசிகர் தலைவா என்று கூறினார். நானும் உடனே அவர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார் என எண்ணிப் பயந்து , படபடத்து நின்றேன்.

மேலும் அவர் ஒருவர் பார்த்துவிட்டால் கூட்டம் கூடிவிடும் என்பதால், விரைவாக செல்ல முயற்சி செய்தேன். மேலும் எனது கார் தூரம் தள்ளி நின்றது. மேலும் அந்த நபரும் தலைவா தலைவா என கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். சீக்கிரமாக அவரிடம் இருந்து தப்பிக்கவேண்டும் என எண்ணி, அருகில் வந்த ஆட்டோ ஒன்றில் ஏறிவிட்டேன். பின் அப்போது பார்த்தால்தான் தெரிகிறது, அந்த நபர் என்னைத் தலைவா என்று கூப்பிடவில்லை. அவர் வேறு எந்த நபரையோ அவ்வாறு கூப்பிட்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியவந்தது என நடிகர் ரஜினிகாந்த் தனது மாறுவேட அனுபவம் பற்றி ஓபனாக பேசியிருந்தார்.