படையப்பாவில் அந்த கதாபாத்திரத்தில்தான் நான் நடிப்பேன் என மீனா ஒரே அடம் – ரஜினிகாந்த் சொன்ன உண்மை!
Rajinikanth About Meena: தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்த்துவருபவர் ரஜினிகாந்த். இவர் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அந்த நிகழ்ச்சியின்போது எஜமான் படத்தின்போது, நடிகை மீனா படையப்பா படத்தில் நடிக்கவிரும்பிய கதாபாத்திரம் குறித்து மனம் திறந்துள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் மீனா
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) பான் இந்திய அளவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் மட்டும் இதுவரை சுமார் 171 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் மட்டுமே நடிக்காமல், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்திருகிறார். அந்த அளவிற்கு தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிரபல நடிகர்களில் ஒருவராக ரஜினிகாந்த் இருந்துவருகிறார். இவர் சினிமாவில் இதுவரை 50 ஆண்டுகளை கடந்துள்ளார். அந்த விதத்தில் 3 தலைமுறைகள் கடந்தும் இவர் படங்களில் நடித்து வருகிறார் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்த படம்தான் படையப்பா (Padayappa). இப்படத்தில் முதலில் நடிகை மீனா (Meena) நடிக்கவிருந்த நிலையில், எஜமான்(Ejamaan) பட ஷூட்டிங்கின் போது மீனா சொன்ன விஷயம் குறித்து முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சம்பளம் இத்தனை கோடிகளா? வைரலாகும் தகவல்
நடிகை மீனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
எஜமான் பட ஷூட்டிங்கின்போது மீனாவுடன் நடந்த நகைச்சுவையான தருணம் குறித்து பகிர்ந்த ரஜினிகாந்த் :
அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் ,”எஜமான படத்தின் ஷூட்டிங்கின்போது மீனாவை நான் பெண் பார்ப்பதுபோல உள்ள ஒரு காட்சி இருந்தது. அந்த காட்சியில் அவர் உண்மையிலே வெட்கப்பட்டிருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது ஆரம்பத்தில் என்னிடம் பேசுவதற்கே வெட்கப்படுவார். ஆனால் போக போக அவர்தான் என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது நான் அவரிடம் படையப்பா படத்தின் கதையை கூறியிருந்தேன். உடனே அவர் என்னிடம் நான் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என கூறினார். உடனே நான் அவரிடம் கேட்டேன், அம்மா உனக்க்கு குழந்தைத்தனமான முகம், நீலாம்பரி கதாபாத்திரம் பண்ணவேண்டும் என்றால் கொஞ்சம் திமிரான முகம் வேண்டும் என கூறினேன்.
இதையும் படிங்க: இந்த போட்டோவில் இருக்கும் குட்டி பாப்பா யார் தெரியுமா? இவரின் முதல் தமிழ் படம் தனுஷ் கூட தான்!
உனக்கு அந்த கதாபாத்திரம் சரிபட்டுவராது, அது வில்லி கதாபாத்திரம் என சொன்னேன். அவங்க என்னை விடவே இல்லை, உடனே நான், நீங்க சௌந்தர்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா? என கேட்டேன். உடனே மீனா எனக்கு அந்த கதாபாத்திரம் வேண்டாம், நான் நீலாம்பரி கதாபாத்திரம்தான் பண்ணுவேன் என கூறினார். நான் அந்த கதாபாத்திரம் கொடுக்கவில்லை என மீனாவிற்கு இன்னும் என்மீது அந்த கோபம் இருக்கிறது” என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.