தியேட்டரில் 25 நாட்களை கடந்த கூலி படம்… மாஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Coolie Movie : நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ள நிலையில் படக்குழு தற்போது புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூலி படம்
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த படம் கூலி. இந்தப் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியதால் படத்தின் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால் படம் ஏ சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு வன்முறைக் காட்சிகள் இல்லை என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கோரி படக்குழு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் இருதரப்பு விசாரனையைக் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் கூலி படக்குழு தொடர்ந்த வழக்கை தள்ளிபடி செய்தது. இதனைத் தொடர்ந்து படம் ஏ சான்றிதழ் உடனே திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்தப் படத்தில் பான் இந்திய நட்சத்திரங்களான அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ் உடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், லொள்ளு சபா மாறன், சார்லி, கண்ணா ரவி, ரச்சிதா ராம் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சன் பிக்சர்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்து இருந்த நிலையில் கூலி படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்த நிலையில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
25 நாட்களை கடந்தது கூலி படம் – வைரலாகும் வீடியோ:
இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களைக் கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் படம் வருகின்ற 11-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என்று முன்னதாக படக்குழு அறிவித்து இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பே ஓடிடியில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்
கூலி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Takeover ottumothamey😎💥 Unstoppable 25 days of #Coolie 🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/jJGAUzd5qK
— Sun Pictures (@sunpictures) September 7, 2025