கரங்கள் ஒசரட்டுமே… 4 நாட்களில் ரூபாய் 400 கோடி வசூல் – மாஸ் காட்டும் கூலி!

Coolie Movie Box Office Collection: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப் போடும் படம் கூலி. இந்தப் படம் உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படக்குழு தற்போது வசூல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கரங்கள் ஒசரட்டுமே... 4 நாட்களில் ரூபாய் 400 கோடி வசூல் - மாஸ் காட்டும் கூலி!

கூலி

Updated On: 

18 Aug 2025 19:34 PM

நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் கூலி. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் குறிப்பாக பிஜிஎம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்து உள்ளனர் என்று படம் வெளியாவதற்கு முன்பு அறிவிப்பு வெளியான போது இவர்கள் அனைவரையும் லோகேஷ் படத்தில் எப்படி பயன்படுத்தி இருபபார். அவர்களின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் எந்த ஏமாற்றமும் இல்லாமல் அனைத்து நடிகர்களுக்கு மாஸான காட்சிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் வைத்து இருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சௌபின் ஷாகிர் மற்றும் உபேந்திரா ஆகியோரின் இண்ட்ரோவிற்கு அனிருத்தின் பின்னணி இசை மாஸாக இருந்தது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலக அளவில் வசூலில் மாஸ் காட்டும் ரஜினிகாந்தின் கூலி படம்:

படம் கடந்த 14-ம் தேதி வெளியான நிலையில் படம் வெளியாகி நான்கு நாட்களில் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் தயாரானதாகக் கூறப்படும் கூலி படம் உலக அளவில் 4 நாட்களில் ரூபாய் 404 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. படம் வெளியாகி 4 நாட்கள் கடந்தும் தொடர்ந்து திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதால் இந்தப் படம் வசூலில் புதிய சாதனைப் படைக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… நடிகை சுவாசிகா குறித்து புகழ்ந்து பேசிய லப்பர் பந்து பட இயக்குநர்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ஐயா எப்படியாவது இத ஹிட் படமா கொடுங்கனு விஜய் சேதுபதி சொன்னார்… தலைவன் தலைவி இயக்குநர் சொன்ன விசயம்!