Thaai Kizhavi: ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு? – எக்ஸ் விமர்சனங்கள் இதோ!
Thaai Kizhavi X Review: நடிகை ராதிகா சரத்குமாரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் தாய் கிழவி. இதை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படமானது இன்று 2026 பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், அதன் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

தாய் கிழவி திரைப்படம் விமர்சனம்
தமிழ் சினிமாவில் பிரபல 90ஸ் கதாநாயகியாக இருந்துவந்தவர் ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar). இவர் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் கமல்ஹாசன் (Kamal Haasan) போன்ற பல்வேறு நடிகர்களுடன் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அந்த வகையில் இவர் தற்போது சினிமாவில் முக்கிய வேடங்களிலும், நடிகர்களுக்கு அம்மா வேடங்களிலும் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் முன்னணி நடிப்பில் இன்று 2026 பிப்ரவரி 27ம் தேதியில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் “தாய் கிழவி” (Thaai Kizhavi). இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கியிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தயாரித்துள்ளார். இதில் ராதிகா சரத்குமார்தான் லீட் கதாநாயகியாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் பாலா சரவணன், இளவரசு, முனீஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது இன்று முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம் .
இதையும் படிங்க: விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?
தாய் கிழவி படத்திற்கு கிடைத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்த பதிவு :
#ThaaiKizhavi – A COMFORTING Sureshot HIT Film
Rural படங்கள் வர்றப்ப சொல்லப்படாத கதை, காட்டப்படாத மனிதர்கள் அவ்ளோ இருக்காங்களே நம்ம ஊர் பக்கம்னு ஆசையா போயி தியேட்டர்ல உக்காருவோம்.. ஆனா அது பழமைவாதத்தையும், நடைமுறை வாழ்க்கைக்கும் பொருந்தாத, மக்களை பின்னோக்கி இழுக்கற கருத்தை… pic.twitter.com/Z5JHZlpLDM
— தோழர் ஆதி (@ThozharAadhi) February 27, 2026
இந்த தாய் கிழவி திரைப்படமானது இதுவரை வெளியாகியுள்ள கிராமப்புற கதைக்களம் கொண்ட படங்களிலிருந்து வித்தியாசமாக அமைந்துள்ளதால். மேலும் இப்படத்தின் கதை நம்மை அப்படியே ஒரு கிராமத்திற்கு இழுத்து செல்வது போன்று, பழமைவாதத்தை மையமாக கொண்டு இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் கதையையும், இயக்குநர் சிவகுமார் முருகேசன் ரசிகர்களை நேரில் அழைத்து செல்வதுபோலவே படத்தை இயக்கியுள்ளாராம்.
ராதிகா சரத்குமார் மற்றும் மற்ற நடிகர்களில் நடிப்பு எப்படி இருக்கு:
#ThaaiKizhavi (4/5) – Golden goose. An absolutely HEARTWARMING film that drives home some good fun and super important messages as well. Debutant director Sivakumar Murugesan strikes it big with his jolly yet thought-provoking film that is as emotional as it is funny.… pic.twitter.com/WvTJbsMjyO
— Siddarth Srinivas (@sidhuwrites) February 25, 2026
தாய் கிழவி படமானது மனதை தொடும் படமாக உள்ளது.வேடிக்கைகள் மற்றும் எமோஷனல் கலந்த படமாக உள்ளதாம். இதில் நடிகை ராதிகா சரத்குமார் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். பாலா சரவணன் இதில் எவ்வளவு அற்புதமானவராக இருக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார், அருள்தாஸ் மற்றும் சிங்கம் புலி ஆகியோர் சிறந்தவபர்கள் என்பது தெரிந்ததே, முனிஸ்காந்தும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க: சில நேரங்களில் பாரமாக உணரும் உலகில், இந்தப் படம் நம்பிக்கையைப் போல உணர்ந்தேன்… தாய் கிழவி படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் அட்லி
மொத்தத்தில் தாய் கிழவி திரைப்படத்தின் திரையரங்கு சென்று பார்க்கலாமா:
இந்த தாய் கிழவி படமானது பக்கா கிராமப்புற பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும் இப்படம் முழுக்க பெண்ணின் வலிமையாக காட்டும் படமாகவே அமைந்துள்ளது. இதில் இசையமைப்பாளரும்தனது இசையமைப்பில் மூலமாக படத்தில் அசைக்கமுடியாத ஒருவராக இருக்கிறார். எமோஷனல், காமெடி மற்றும் கலகலப்பை விரும்புபவர்கள் நிச்சயமாக இப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.