Thaai Kizhavi: சிவகார்த்திகேயன் குரலில்.. ‘தாய் கிழவி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Thaai Kizhavi Vaaraa Song : தமிழில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராக படங்களை தயாரித்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடித்திருக்கும் படம்தான் தாய் கிழவி. தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலான தாய் கிழவி வாரா என்ற படலானது வெளியாகியுள்ளது.

Thaai Kizhavi: சிவகார்த்திகேயன் குரலில்.. தாய் கிழவி படத்தின் முதல் பாடல் வெளியீடு!

தாய் கிழவி பட முதல் பாடல்

Updated On: 

05 Feb 2026 17:06 PM

 IST

தமிழில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து அசத்திவந்தவர் ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar). இவர் தற்போது திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவரின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான் தாய் கிழவி (Thaai Kizhavi). இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugeshan) இயக்க, சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமாருடன் நடிகர்கள் இளவரசு, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாலா சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் வயதான கிழவி வேடத்தில் நடித்துள்ளார். இவர் இப்படத்திற்காக பட்ட கஷ்டங்கள் குறித்தும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.

அந்த விதத்தில் இப்படமானது 2026 பிப்ரவரி 20ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. “தாய் கிழவி வாரா” (Thaai Kizhavi Vaaraa) என்ற இப்பாடலை நடிகர் சிவகார்திகேயன்தான் பாடியுள்ளார். தற்போது இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அடுத்தப் படம் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன மாஸ் அப்டேட்

தாய் கிழவி படத்தின் முதல் பாடல் குறித்த எக்ஸ் பதிவு:

இந்த தாய் கிழவி படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில், அதிரடி நகைச்சுவை மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் ராதிகா சரத்குமார்தான் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. இந்த படத்திற்கு பைசன் படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் தற்போது இப்படத்தின் முதல் பாடலான “தாய் கிழவி வாரா” வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட ஷூட்டிங் நிறைவு.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

இன்னும் இப்படத்தின் ரிலீஸிற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஃபீல் குட் கதைக்களத்தில் இது உருவாகியுள்ள நிலையில், படம் நிச்சயம் வெற்றிபெறும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயனும் புது படத்தில் இணையவுள்ளாராம். இப்படத்தில் உடனடியாக சிவகார்த்திகேயன் இணைவதாக கூறப்படும் நிலையில், கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதை தயாரிக்கவுள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பவரின் வாழ்க்கைக்கே மதிப்பு இல்லை’.. தொழிலதிபர் வேதனை!!
‘மார்கோ’ பட இயக்குநருடன் பெரும் பட்ஜெட் படத்தில் நடிக்க தயாராகும் பாலகிருஷ்ணா!
புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி..
உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்