70ஸ் நடிகரின் மகள் டூ பிரபல நடிகரின் மனைவி.. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா?

Guess The child Tamil Star: தென்னிந்திய சினிமாவில் பல்வேறு உச்ச நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருகிறார்கள். அந்த வகையில் கீழே இருக்கும் பிளாக் அண்ட் வைட் போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகை-னு நியாபகம் இருக்கிறதா?. அது குறித்து பார்க்கலாம்.

70ஸ் நடிகரின் மகள் டூ பிரபல நடிகரின் மனைவி.. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா?

தமிழ் பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம்

Updated On: 

27 Feb 2026 17:40 PM

 IST

கோலிவுட் சினிமாவில் பல உச்ச நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருகிறார்கள். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரபலமாக நடிகர் ஒருவர் இருந்தால், அவரின் மகள் மற்றும் உறவினர்களும் சினிமாவின் மீது ஆசை கொண்டு படங்களில் நடிப்பது வழக்கமே. அந்த வகையில் மேலே பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தில் இருக்கும் சிறுமி எந்த நடிகை-னு தெரிகிறதா?. இவரின் தந்தை 50ஸ் முதல் 70ஸ் போன்ற காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர். இவர் நடிகர் சிவாஜி (Shivaji) முதல் எம்.ஜி.ஆர் (MGR) போன்ற நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவரின் பிரபலத்திற்கு பிறகு இவரின் மகன்கள் மற்றும் மகள்களும் சினிமாவில் கதாநாயகியாக நடித்துள்ளனர். அந்த வகையில் அதில் ஒருவராக இருப்பவர்தான் மேலே இருக்கும் புகைப்படத்தில் உள்ள சிறுமி. இவர் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் கமல்ஹாசன் (Kamal Haasan) போன்ற நடிகர்களுக்கு ஜோடியாகவும், விஜய் (Vijay) முதல் சூர்யா (Suriya) போன்ற நடிகர்களின் தாயாகவும் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் பிரபல 90ஸ் நடிகரின் மனைவியும் ஆவார். இவர் கிழவியாகவும் படத்தில் நடித்துள்ளார். இப்போதாவதாவது இது யாருனு தெரிகிறதா?. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை வேறுயாருமில்லை நடிகை ராதிகா சரத்குமார்தான்.

இதையும் படிங்க: ‘தலைவர் 173 படத்தில் நடிக்கிறேனா?’ – உண்மையை உடைத்த பிரியங்கா மோகன்!

நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு:

நடிகை ராதிகா சரத்குமாரின் சினிமா வாழ்க்கை :

நடிகை ராதிகா சரத்குமார் எம்.ஆர்.ராதாவின் மகள் ஆவார். இவர் கடந்த 1978ம் ஆண்டில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இதையடுத்து, இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள் போன்ற படங்ககளில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமில்லை தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சினிமாவில் 16 ஆண்டுகளை கடந்த சமந்தா ரூத் பிரபு – ரசிகர்கள் மத்தில் குவியும் வாழ்த்து!

சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியபோது தமிழில் சீரியல்களிலும் இவர் நடித்துவந்தார். பெண், விடுதலை, சித்தி, செல்வி, அரசி மற்றும் வாணி ராணி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் திரைப்படங்களில் நடிகர்களின் அம்மா வேடங்களிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரை லீட் கதாநாயகியாக கொண்டு இறுதியாக வெளியான திரைப்படம்தான் தாய் கிழவி. இது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றவருகிற்து என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்