கன்னட மொழி சர்ச்சை… கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

Thug Life Movie: கன்னட மொழி குறித்து நடிகர் கமல் ஹாசனின் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் கர்நாடகாவில் கமல் ஹாசனின் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கன்னட மொழி சர்ச்சை... கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

தக் லைஃப்

Updated On: 

03 Jun 2025 16:01 PM

நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் தக் லைஃப். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழி என்று கூறியது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடகாவில் பல தரப்பினரும் தெரிவித்து வந்தனர். அரசியல் தலைவர்கள் முதல் சினிமா துறையினர் வரை பலரும் கமல் ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கர்நாடகாவில் அவரது படம் திரையிட தடை விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகா நீதிமன்றத்தை நாடினார் கமல் ஹாசன்.

பாதுகாப்பு கோரிய கமலுக்கு அட்வைஸ் கொடுத்த நீதிமன்றம்:

தனது படம் கர்நாடகாவில் வெளியாகும் போது பாதுகாப்பு அளிக்க கோரி நடிகர் கமல் ஹாசன் நேற்று 2-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று 3-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு விசாரனைக்கு வந்தது. அப்போது நடிகர் கமல் ஹாசனிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. மேலும் மன்னிப்பு கோரியிருந்தாள் இந்த பிரச்னை இவ்வளவு தூரம் வந்து இருக்கது என்றும் மன்னிப்பு கேட்டால் சரியாகும் என்றும் தெரிவித்தது.

மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசனின் விளக்கம்:

இந்த நிலையில் இன்று இந்த மொழி சர்ச்சை குறித்து நடிகர் கமல் ஹாசன் விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த மண்ணின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பு நிலையானது மற்றும் இதயப்பூர்வமானது. அனைத்து மொழியையும் நான் கண்ணியத்துடன் நடத்துபவன். எனது வார்த்தைகளை கன்னடர்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த அறிக்கையில் அவர் மன்னிப்பு எதுவும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தில் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு:

இந்த நிலையில் இன்று நடைப்பெற்ற வழக்கை கர்நாடகா உயர் நீதிமன்றம் ஜூன் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டிற்கு ஒத்திவைத்தது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், அவரது வரவிருக்கும் படமான தக் லைப்பை கர்நாடகாவில் தற்போது வெளியிடவில்லை என்றும் தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் தெரிவித்துள்ளது.