ஜன நாயகன் படம் 100 சதவீதம் தியேட்டரில் வெளியாகும்.. ஆனால் – திருப்பூர் சுப்ரமணியன்!

Tiruppur Subramanian About Jana Nayagan: விஜய், எச்.வினோத்தின் கூட்டணியில் தயாராகியிருந்த படம்தான் ஜன நாயகன். இப்படமானது மூலவதுமாக இணையத்தில் லீக்கான விஷயம் அனைவரும் அறிந்ததே. அதனால் இப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா? என கேள்வி எழும்பியுள்ளது. அந்த வகையில் அதற்கு திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜன நாயகன் படம் 100 சதவீதம் தியேட்டரில் வெளியாகும்.. ஆனால் - திருப்பூர் சுப்ரமணியன்!

ஜன நாயகன் படம்

Updated On: 

12 Apr 2026 11:35 AM

 IST

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன் திரைப்படம் (Jana Nayagan). இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவர்கள் ஜோடி இப்படத்தின் மூலம் இரண்டாவது முறை இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர்கள் மமிதா பைஜூ (Mamitha), நரேன், பிரியாமணி, பாபி தியோல் என பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் இப்படமானது முழுவதுமாக இணையத்தில் லீக்காகியிருந்தது. இது ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இதை எதிர்ப்பு பல தென்னிந்திய பிரபலங்களும் குரல் கொடுத்திருந்தனர்.

அந்த வகையில் இன்னும் இப்படத்திற்கு சென்சார் கிடைக்காத நிலையில், இப்படம் தியேட்டர்களில் வெளியாகுமா? என சந்தேகம் எழுந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியன் (Tiruppur Subramanian), ஜன நாயகன் படம் 100 சதவீதம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமணம் கொண்டாட்டம் முடிந்து ஷூட்டிங் வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

ஜன நாயகன் திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு குறித்து திருப்பூர் சுப்ரமணியன் பேச்சு:

அவர் அந்த நேர்காணலில் பேசுகையில், “ஜன நாயகன் திரைப்படமானது 100 சதவீதம் திரையரங்குகளில் வெளியாகும். இந்த வார வெள்ளி அல்லது அடுத்த வெள்ளியோடு திரைப்படத்தை வெளியிட படக்குழு இலக்காக வைத்துள்ளனர். வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமைக்குள் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழை பெறுவதற்கு படக்குழுவினர் முயற்சி செய்துவருகிறார்கள். விரைவில் கிடைக்கும். இப்படமானது பல கோடி வசூலை கொடுத்து, திரையரங்குகளுக்கும்நல்ல வருமானத்தை கொடுக்கும் என எதிர்பார்த்தோம்.

இதையும் படிங்க: புதிய தொடரில் நடிக்கும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.. எந்த டிவி சீரியல் தெரியுமா?

லியோ மற்றும் பீஸ்ட் படங்களை போலவே இப்படமும் வரவேற்பை பெர்ம் என நினைத்தோம். அந்த வகையில் ஜன நாயகன் லீக் படத்தை பலரும் பார்த்திருக்க கூடும் என்பதால், இப்படம் எவ்வளவு வசூலை பெரும் என்பதே சந்தேகம்தான். இதன் விளைவாக பல கொடிகள் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜன நாயகன் படம் குறித்து திருப்பூர் சுப்ரமணியன் பேசியது குறித்து வைரலாகும் பதிவு:

இந்த ஜன நாயகன் படத்தை லீக் செய்தது யார் என தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். அதில் முதல்கட்டமாக இப்படமானது போஸ்ட் ப்ரொடக்ஷன் நேரத்தில்தான் லீக் செய்யப்பட்டுள்ளது என்றும், சென்சாருக்கு கொடுத்த பிறகு இல்லை என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இதை லீக் செய்தது யார் என தீவிர விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?