தனுஷின் கர படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட்

Actor Dhanush Kara Movie Release Update: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் கொடுத்த அப்டேட் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தனுஷின் கர படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட்

கர

Published: 

28 Feb 2026 11:46 AM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்கள் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வெளியான அந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வருகிறார். அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கர. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது நிலையில் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த கர படத்தை நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் போர் தொழில் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இந்த கர படமும் மாபெரும் வெற்றிப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் சார்பாக தயாரிப்பாளர் ஐசர் கே கணேஷ் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தனுஷின் கர படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட்:

இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பேசியதாவது, தனுஷ் சாரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது அர்ப்பணிப்பு. அவரது கடின உழைப்பை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். இந்தப் படத்தில், அவர் மிகுந்த கடின உழைப்பை கொடுத்துள்ளார். அது உண்மையில் திரையில் தெரிகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கர படம் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு அன்று வெளியாகிறது என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்.. நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு!

இணையத்தில் வைரலாகும் ஐசரி கணேஷ் பேச்சு:

Also Read… அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? வைரலாகும் அப்டேட்

Follow Us
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..