ஜன நாயகன் படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கமா? – தயாரிப்பாளர் தனஞ்செயன் அதிரடி பதிவு!

Producer Dhananjheyan Clarifies Jana Nayagan Movie Rumor: விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியிருப்பது ஜன நாயகன். இப்படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திலிருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வைரலாகிவரும் நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜன நாயகன் படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கமா? - தயாரிப்பாளர் தனஞ்செயன் அதிரடி பதிவு!

விஜய் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன்

Updated On: 

02 Feb 2026 21:34 PM

 IST

கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பிரம்மாண்ட திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணி ஏற்கனவே நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் (H. Vinoth) இயக்கியுள்ள நிலையில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படமானது குமார் ரூ 450 முதல் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. பின் இப்படத்திற்கு சென்சார் வழங்கப்படாத நிலையில், படத்தின் ரிலீஸை படக்குழு ஒத்திவைத்திருந்தது. தற்போது இப்படத்தின் சென்சார் வழக்கானது நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் இன்னும் 2 மாதங்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக இணையத்தில், ஜன நாயகன் படத்திலிருந்து சென்சார் பிரச்சனையின் காரணமாக 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக பரவிவருகிறது. இந்நிலையில் அது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் (Dhananjheyan) விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சைக்கோ கொலையாளியாக மிரட்டும் மம்முட்டி… ஓடிடியில் வெளியாகியுள்ள கலம்காவல் படம் எப்படி இருக்கு?

ஜன நாயகன் பட காட்சிகள் நீக்கப்பட்டதை என்பது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன்:

அந்த பதிவில் தயாரிப்பாள தனஞ்செயன், “ஜன நாயகன் திரைப்படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு, சென்சார் செய்ய சமர்பிக்கப்பட்டதாக இதுபோன்ற கதைகள் ஊடகங்களில் பரவிவருகிறது. இதை இன்னும் படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்யாமலே இதுபோன்ற தகவல்கள் ஏன் பரப்பப்பட்டுவருகிறது. இது முற்றிலும் போலியான தகவல்கள். அதை பகிர்வதை நிறுத்துங்கள். எந்த ஒரு தகவல்களையும் பகிரும் முன் தயாரிப்பாளரின் உறுதி செய்யும்வரை காத்திருப்பது அவசியம்.

இதையும் படிங்க: சியான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.. துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் அப்டேட்!

ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனையை இன்னும் நீதிமன்றத்தில் முடியவில்லை. அதன்பிறகே இப்படம் எப்போது வெளியாகும் என தெரியும். ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டபிறகுதான் பல புதிய படங்கள் தங்களின் ரிலீஸ் தேதியை நிர்ணயிக்க காத்திருக்கின்றனர். இப்படம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியாகும் என நம்புகிறேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

ஜன நாயகன் படம் சென்சார் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கும் ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்னை இன்னும் முடியவில்லை. இப்படமானது விரைவில் சென்சார் செய்யப்பட்டு, வரும் 20267 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் வெளியாகிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!