வெற்றிமாறன், மாரிசெல்வராஜ் மாதிரி சிறந்த இயக்குநர்கள் தமிழில் சினிமாவில் இருக்கிறார்கள் – நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன்

Actor Prithviraj Sukumaran: மலையாள சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையை கொண்டவராக இருப்பவர் பிரித்விராஜ் சுகுமார். இவர் முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த இயக்குநர்கள் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெற்றிமாறன், மாரிசெல்வராஜ் மாதிரி சிறந்த இயக்குநர்கள் தமிழில் சினிமாவில் இருக்கிறார்கள் - நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன்

பிரித்விராஜ் சுகுமாரன்

Published: 

09 Aug 2025 21:16 PM

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களான சுகுமாரன் மற்றும் மல்லிகா சுகுமாரனின் இரண்டாவது மகன் தான் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran). இவர் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம ஆன பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து நடிகராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிகராக மட்டும் இன்றி சினிமாவில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பல அவதாரங்களை எடுத்துள்ளார் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியான எல் 2 எம்புரான் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரித்விராஜ் சுகுமாரன் தான் இயக்கவும் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிகராக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்த நிலையில் இயக்குநராகவும் இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமா குறித்து பிரித்விராஜ் சுகுமாரன் பேட்டி ஒன்றில் முன்னதாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா இயக்குநர்களைப் பாராட்டிய பிரித்விராஜ் சுகுமாரன்:

அதன்படி பிரித்விராஜ் சுகுமாரன் அளித்தப் பேட்டியில் மலையாள சினிமாவில் தற்போது தொடர்ந்து நல்லப் படங்கள் வெளியாகி வருகின்றது. மேலும் மலையாள சினிமாவில் நல்ல படைப்புகள் வருவதை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றும் பிரித்விராஜ் சுகுமாரன் தெரிவித்து இருந்தார்.

அதேபோல தமிழ் சினிமாவில் சிறந்த படைப்பாளிகள் இல்லை என்று அர்த்தம் இல்லை. இந்த தமிழ் சினிமாவில் தான் வெற்றிமாறன் மாதிரியான இயக்குநரும் மாரிசெல்வராஜ் மாதிரியான சிறந்த இயக்குநர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பக்கம் என்றால் பக்கா மாஸ் படங்களை இயக்கும் சங்கர் மற்றும் அட்லி போன்றவர்களும் தமிழ் சினிமாவில்தான் இருக்கிறார்கள் என்று பிரித்விராஜ் சுகுமாரன் தெரிவித்து இருந்தார். அந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஃபகத் பாசிலின் ஆவேஷம் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

பிரித்விராஜ் சுகுமாரன் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பவர் ஹவுஸ் பாடலுக்கு வைப் செய்யும் சிங்கப்பூர் காவல் துறை – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!