இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததா இயக்க உள்ளது இந்த மலையாள நடிகரைத்தான் – அவரே சொன்ன விசயம்!

Director Prem Kumar: கோலிவுட் சினிமாவில் இதுவரை இரண்டு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இயக்குநர் பிரேம் குமார். இந்த நிலையில் இவர் அடுத்ததாக பிரபல மலையாள நடிகர் ஒருவரை இயக்க உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததா இயக்க உள்ளது இந்த மலையாள நடிகரைத்தான் - அவரே சொன்ன விசயம்!

இயக்குநர் பிரேம் குமார்

Published: 

10 Sep 2025 11:12 AM

 IST

கோலிவுட் சினிமாவில் சினிமாட்டோகிராபராகா அறிமுகம் ஆகி தற்போது மக்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பிரேம் குமார் (Director Prem Kumar). அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 96. இயக்குநர் பிரேம் குமார் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். 96-ல் 10-ம் வகுப்பு படித்தவர்கள் ரீ யூனியனில் சந்திக்கொள்ளும் போது அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மிகவும் அழகாக காட்டியிருந்தார். இந்தப் படத்தைப் பார்த்த பலருக்கும் அவர்களின் பள்ளி வயது காதலை மீண்டும் இந்தப் படம் நினைவுப்படித்தியதாகவும் தெரிவித்தனர். அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார்.

பள்ளியில் படிக்கும் போது த்ரிஷா மீது காதல் கொள்ளும் விஜய் சேதுபதி அந்த காதல் சேரவில்லை என்றாலும் த்ரிஷாவை நினைத்துக்கொண்டே திருமணம் செய்யாமல் அந்த காதலை போற்றி வாழும் நபராக இருக்கிறார். இந்த நிலையில் ரீ யூனியனில் விஜய் சேதுபதி அப்படியே இருப்பதைப் பார்த்த த்ரிஷா அவரின் வாழ்க்கையை மாற்றியமைக்க நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை. மிகவும் ஃபீல் குட்டாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மெய்யழகன். நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். சொந்தக்காரர்கள் எல்லாரும் கெட்டவர்கள் இல்லை நம் மீது தீராக் காதல் உடையவர்களும் இருக்கிறார்கள் என்பதை அழகாக இந்தப் படம் காட்டியிருந்தது. இது தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததாக யார் படத்தை இயக்க உள்ளார் என்ற கேள்வி இருந்து வந்தநிலையில் அவரே அதற்கு பதிலளித்துள்ளார்.

ஃபகத் பாசிலை இயக்கும் பிரேம் குமார்:

அதன்படி இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் விக்ரம் படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் விக்ரம் உடனான படம் இருப்பதை உறுதி செய்த இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததாக பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசிலை வைத்துதான் படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் கதை ஃபகத் பாசிலுக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் பிரேம் குமார், நான் முன்பு இயக்கிய இரண்டு படங்களைப் போல இந்தப் படம் நிச்சயம் இருக்காது என்றும் இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் அவர் அந்தப் பேட்டியில் கூறியது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Also Read… ஓடிடியில் வெளியான பிக்பாஸ் ராஜுவின் பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

இயக்குநர் பிரேம் குமார் சொன்ன விசயம்:

Also Read… Suriya : பெயருக்கு முன்னாள் அடைமொழி வருவது எனக்கு பிடிக்கவில்லை – சூர்யா ஓபன் டாக்!