பிக் பாஸ் 9 தமிழ் வீட்டினுள் வைல்ட் கார்ட் எண்டரியாக நுழைந்த பிரஜின், சாண்ட்ரா, மற்றும் அமித்!

Bigg Boss Tamil 9 Wildcard Entry: கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தமிழில் வெளியாகிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது சுமார் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இலையில், தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்டரியாக அமிர்த் , சாண்ட்ரா மற்றும் பிரஞ்சன் நுழைந்துள்ளார்கள்.

பிக் பாஸ் 9  தமிழ் வீட்டினுள் வைல்ட் கார்ட் எண்டரியாக நுழைந்த பிரஜின், சாண்ட்ரா, மற்றும் அமித்!

பிரஜின் பத்மநாபன், சாண்ட்ரா ஏமி மற்றும் அமித் பார்கவ்

Published: 

28 Oct 2025 19:47 PM

 IST

தமிழில் மக்களிடையே ஆண்டுதோறும் மிகவும் பிரபலமாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 9 வருடங்களாக தமிழில் ஒவ்வொரு சீசனாக ஒளிபரப்பாகிவருகிறது. மொத்தமாக இதுவரை 8 சீசன்கள் நிறைவடைந்த நிலையில் இந்த 2025ம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியானது நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமான நிலையில், தற்போது 3 வாரங்ககளை கடந்து வெளியாகிவருகிறது. மொத்தமாக 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது மொத்தமாகவே 16 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்நிலையில் வெறும் 3 வாரங்களில் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டநிலையில், விரைவில் வைல்ட் கார்ட் எண்டரி (Wildcard entry) இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று 2025 அக்டோபர் 28ம் தேதியில் வைல்ட் கார்ட் எண்டரியாக கிட்டத்தட்ட 3 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இந்த பிக்பாஸ் சீசன் 9ல் முதல் வைல்ட் கார்ட் எண்டரியாக சீரியல் நடிகை திவ்யா கணேசன் (Divya Ganesan) நுழைந்துள்ளார். மேலும் அவரை தொடர்ந்து சீரியல் நடிகரான பிரஜின் பத்மநாபன் (Prajin Padmanabhan ) மற்றும் அமித் பார்கவ் (Amit Bhargav) என மொத்தம் 3 வைல்ட் கார்ட் எண்டரி போட்டியாளர்கள் நுழைந்துள்ளார்.

இதையும் படிங்க : பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் போட்டியாளராக நுழைந்த திவ்யா கணேஷ் – வைரலாகும் வீடியோ!

2வது வைல்ட் கார்ட் எண்டரியாக நுழைந்த பிரஜின் பத்மநாபன்வ் மற்றும் சாண்ட்ரா ஆமி வீடியோ :

இவர் தமிழில் சீரியல் நடிகராக நுழைந்து மக்களிடையே பிரபலமானார். காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி, வைதேகி காத்திருந்தாள், அன்புடன் குஷி என பல்வேறு சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். மேலும் இவர் சினிமாவிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக படிக்காத பக்கங்கள் என்ற திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயம் முடிந்துவிட்டதா? ரசிகரின் கேள்விக்கு ரஷ்மிகாவின் நச் பதில்

இந்நிலையில் இவர் பிக்பாஸ் சீசன் 9 தமிழில் வைல்ட் கார்ட் எண்டரியாக நுழையவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியாகிவந்தது. அதில் இவரும், இவரின் மனைவியும் நுழைவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த பிக்பாஸ் தமிழில் முதல் முறையாக நிஜ ஜோடியான பிரஜின் பத்மநாபன் மற்றும் சாண்ட்ரா ஆமி இந்த பிக்பாஸ் சீசன் 9ல் வைல்ட் கார்ட் எண்டரியாக நுழைந்துள்ளார்.

3வது வைல்ட் கார்ட் எண்டரியாக நுழைந்த அமித் பார்கவ் வீடியோ :

தமிழில் சீரியல் நடிகராக நுழைந்து, தற்போது பிரபல நடிகராக இருந்துவருபவர் அமித் பார்கவ். இவர் தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து மக்களிடையியே மிகவும் பிரபலமானார். இந்த சீரியலில் இவர் நடிகை பிரியா பவானி ஷங்கருடன் இணையானது நடித்திருந்தார். மேலும் இவர் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் 3வது வைல்ட் கார்ட் எண்டரியாக நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.