LIK: ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
LIK Movie Trailer Update : பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மூவி
கோலிவுட் சினிமாவில் காதல், எமோஷனல் போன்ற சிறந்த கதைக்களங்களை கொடுத்து, மக்களிடையே பிரபலமான இயக்குநராக இருப்பவர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan). இவரின் இயக்கத்தில் எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள படம்தான் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (Love Insurance Kompany). இந்த படமானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாராகிவரும் நிலையில், வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். நடிகை க்ரித்தி ஷெட்டி அறிமுகமான முதல் தமிழ் படம் இதுதான். இந்த படத்தின்ஸ் ஹூட்டிங் கடந்த 2024ம் ஆண்டுகள் தொடங்கிய நிலையில், 2025ம் ஆண்டு இறுதியில் முடிந்தது. அதை தொடர்ந்து கிட்டத்தட்ட பலமுறை இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது உறுதியாக இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகுவதாக அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ட்ரெய்லர், நாளை (04/04/2026) மாலை 5 மணியளவில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: கிரைம் திரில்லர் கதையில்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா காளிதாஸ் 2 படம்? – விமர்சனங்கள் இதோ!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Gear up for 2040 🤍❤️ #LIK trailer drops tomorrow 5pm 🤖#LIKFromApril10 #LIK #LoveInsuranceKompany
An @anirudhofficial musical 🎵
A #Wikki originalStarring @pradeeponelife @IamKrithiShetty @iam_SJSuryah @Gourayy @iYogiBabu@dop_ravivarman @PradeepERagav @muthurajthangvl… pic.twitter.com/1t7AWXO08p
— Seven Screen Studio (@7screenstudio) April 3, 2026
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் :
இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் க்ரித்தி ஷெட்டியிடன், நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த ராஜ், எஸ்.ஜே.சூர்யா, கௌரி ஜி கிஷன், மிஷ்கின், சீமான், சுனில் ரெட்டி என பல்வேறு திரை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் அதிகம் கிராபிக்ஸ் மற்றும் பல எதிர்கால விஷயங்கள் காட்டப்பட்டுள்ளதாம். இப்படத்தின் கதை 2040ம் ஆண்டில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொஞ்சும் தென்றலா.. உயிர் கொல்லும் மின்னலா.. ஒன்ஸ் மோர் படத்தின் ‘இந்திரா’ வீடியோ பாடல் வெளியீடு!
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 4 பாடல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இப்படமானது 2 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களுக்கு மேல் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாம். மேலும் சென்சார் குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாம். அதன்படி 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்படத்தை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.