Pradeep Ranganathan: தனுஷ் வழியில் பிரதீப் ரங்கநாதன்.. என்ன விஷயம் தெரியுமா?

Pradeep Ranganathans Next: தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமான நடிகராக உருவெடுத்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் இறுதியாக டியூட் திரைப்படமானது வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து இவரின் நடிப்பில் மேலும் புதிய படங்கள் உருவாகிவருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், தனுஷைப் போன்று மாஸ் படங்களில் நடிப்பேன் என கூறியுள்ளார்.

Pradeep Ranganathan: தனுஷ் வழியில் பிரதீப் ரங்கநாதன்.. என்ன விஷயம் தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன் மற்றும் தனுஷ்

Published: 

22 Oct 2025 12:35 PM

 IST

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகனாக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், மக்களிடையே சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) கோமாளி (Comali) என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்களிடையே பிரபலமான இவர், அந்த படத்தில் இறுதி காட்சியில் கேமியோ வேடத்தில் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, லவ் டுடே (Love Today) என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் அறிமுகமானார். இந்த படங்களை அடுத்ததாக மற்ற இயக்குநர்களின் படங்களிலும் ஹீரோவாகவே நடிக்க தொடங்கினர். அந்த வகையில் இவரின் நடிப்பில் டிராகன் (Dragon) மற்றும் டியூட் (Dude) போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டியூட். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் (Keerthishwaran) இயக்கியிருந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

இந்த திரைப்படமானது கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை அடுத்ததாக சமீபத்தில் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், தனுஷை (Dhanush) போன்று வட சென்னை மற்றும் அசுரன் போன்ற மாஸ் படங்களில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விஜய் – சூர்யா கூட்டணி.. ரீ- ரிலீசாகும் ‘ப்ரண்ட்ஸ்’ படம்.. எப்போது?

ஆக்ஷ்ன் நிறைந்த மாஸ் படங்களில் நடிப்பது குறித்து பிரதீப் ரங்கநாதன் பேசிய விஷயம் :

அந்த நிகழ்ச்சியின்போது ரசிகர் ஒருவர் பிரதீப் ரங்கநாதனிடம், “நீங்கள் இளைஞர்களுக்கு ஏற்ற காதல் திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறீர்கள். மேலும் வடசென்னை மற்றும் அசுரன் போன்ற  மாஸ் திரைப்படங்களில் எப்போது நடிக்கபோகிறீர்கள் ?” என கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், “விரைவில் அது போன்ற படங்களை எதிர்பார்க்கலாம்” என அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கவினின் மாஸ்க் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

தொடர்ந்து 2கே கிஸ் காதல் தொடர்பான படங்களில் நடித்து வெற்றிபெற்றுவரும் பிரதீப் ரங்கநாதன், இந்த மாதிரியான படங்களை தொடர்ந்து ஆக்ஷ்ன் காட்சிகளில் எப்போது நடிக்கிறார் என்பது ரசிகர்களின் கேள்வியாகவே இருக்கிறது. விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை அடுத்ததாக, இவர் மாஸ் ஆக்ஷ்ன் காட்சிகள் இடம்பெறும் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் பேசிய வீடியோ பதிவு :

பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட வசூல் :

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூவின் கூட்டணியில் வெளியான படம் டியூட். இந்த திரைப்படமானது காதல், எமோஷனல், அதிரடி காமெடி என மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி மொத்தமாக சுமார் ரூ.83 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.