அந்த படத்தை நான் இயக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதீப் ரங்கநாதன்!
Pradeep Ranganathan: இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் பிரதீப் ரங்கனாதன். இவர் பிரபலங்களை வைத்து படம் இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வைரலான நிலையில் அதுகுறித்து தற்போது பேசியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி சூப்பர் ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) தற்போது தற்போது நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இறுதியாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றைய தலைமுறையினரின் காதலை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து பிரபலங்கள் பலர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிராகன் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு படங்கள் நடித்து முடித்துள்ளார்.
அதன்படி முன்னதாக தீபாவளியை முன்னிட்டு நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூட் என இரண்டு படங்களுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திவந்த நிலையில் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தீபாவளிக்கு டியூட் படம் மட்டும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படத்தை நான் இயக்கவில்லை:
இந்த நிலையில் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலானது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரதீப் ரங்கநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய பிரதீப் ரங்கநாதன் நான் ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார் காம்போ படத்தை இயக்கவில்லை. நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்துவதால் அதை இயக்கவில்லை. அந்தப் படத்திற்கு எனக்கு வாய்ப்பு வருகிறதா என்பதை என்னால் வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read… திருமண உறவு குறித்து அழகாக பேசிய இறுகப்பற்று படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு…!
இணையத்தில் கவனம் பெறும் பிரதீப் ரங்கநாதன் பேச்சு:
“I’m not directing #Rajinikanth sir & #KamalHaasan sir Combo film❌. I’m not doing it because I’m focused on Acting right now🌟. I can’t reveal if I’m offered for that film👀”
So, #PradeepRanganathan was also one among the list of Dir of that film🔥pic.twitter.com/jnpMKMSB5H— AmuthaBharathi (@CinemaWithAB) October 6, 2025