சீமான் சாருக்கு இருக்குற அறிவு ரொம்ப அதிகம்.. அந்த விஷயத்தை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன் – பிரதீப் ரங்கநாதன் பேச்சு!
Pradeep Ranganathan Praises Seeman: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளர்ந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், சீமான் குறித்த நல்ல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் சீமான்
கோலிவுட் சினிமாவில் தற்போது இளம் கதாநாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 3 படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தாலும், இப்படங்கள் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 4வது படமாக வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் மற்றும் ரௌடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி (Krithi Shetty) , எஸ்.ஜே.சூர்யா (Sj Suryah) மற்றும் சீமான் (Seeman) போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன். அதில் சீமானிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் மற்றும் அவரின் நல்ல குணங்கள் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மோகன்லால் முதல் டொவினோ தாமஸ் வரை… கேரளா தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபல நடிகர்கள்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட பதிவு:
சீமானின் நல்ல குணங்கள் குறித்து பெருமையாக பேசிய பிரதீப் ரங்கநாதன்:
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின்போது பேசிய பிரதீப்பின் ரங்கநாதன், அதில் “எனக்கு இந்த பிரசன்டேஷன் குறித்த ஐடியாவே சீமான் அண்ணாவிடமிருந்துதான் வந்தது. அவர் பல அரசியல் பிரச்சாரங்களில் பிரசன்டேஷன் செய்துதான் காட்டுவார். அது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதனால் அவரிடமிருந்து அந்த ஐடியாவை நான் எடுத்துக்கொண்டேன். இதுபோல சீமான் சாரிடம் நல்ல குணங்கள் நிறைய இருக்கு. அவருடன் இருப்பவர்களை நல்ல பார்துகொவார். நான் ஒருமுறை சாப்பிட சென்றிருந்தேன். அப்போது அவரே சமைத்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது அவர் என்னை கவனித்த விதம் எனக்கு பிடித்திருந்தது. மேலும் அவரு அவரிடம் இருக்கும் அறிவை அந்த அளவிற்கு வெளிகாட்டமாட்டார்.
இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட கதையே அப்படிதான்.. முழுக்க ஜாலியான படம் – மமிதா பைஜூ பேச்சு!
ஆனால் அவருக்கும் அறிவு ரொம்பவே அதிகம். அவருக்கு தெரிஞ்ச விஷயங்கள் அளவிற்கு எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் அவர் அந்த அறிவை கொண்டுவந்து என்னிடம் பேசமாட்டாரு. சினிமாவில் உள்ளவர்களிடம் அரசியல் பேசமாட்டாரு, அரசியலில் இருந்துவந்தவர்களிடம் சினிமா பற்றி பேசமாட்டாரு. யார் யாரிடம் எப்படி பேசவேண்டும் என்பது அவருக்கு தெரியும். இந்த நல்ல குணத்தை நானும் எடுத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். அவர் நான் பார்த்ததில் கியூட்டான மனிதர்” என கூறினார்.