The Raja Saab: பிரபாஸின் ஹாரர் காமெடி.. வெளியானது ‘தி ராஜா சாப்’ பட 2வது ட்ரெய்லர்!
The Raja Saab 2.0 Trailer: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக கலக்கிவருபவர்தான் பிரபாஸ். இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் தி ராஜா சாப். இப்படத்தின் முதல் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது 2வது ட்ரெய்லர் பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தி ராஜா சாப் டிரெய்லர்
நடிகர் பிரபாஸின் (Prabhas) முன்னணி நடிப்பில் தொடர்ந்து பான் இந்திய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் கல்கி 2898ஏடி (Kalki2898AD). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. பான் இந்திய மொழிகளில் வெளியான இப்படம் சுமார் ரூ 1800 கோடிகளுக்கு மேல் வசூலித்து ஹிட் கொடுத்திருந்தது. இந்த் படத்தை அடுத்தாக கண்ணப்பா (Kannappa) மற்றும் மிராய் (Mirai) போன்ற படங்களில் கேமியோ வேடங்களில் நடித்து வரவேற்கப்பட்டிருந்தார். அந்த வகையில் இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள திரைப்படம்தான் தி ராஜா சாப் (The Raja Saab). இந்த படத்தை இயக்குநர் மாருதி இயக்க, பீப்புள் மீடியா பேக்டரி மற்றும் ஐ.வி.ஒய் என்டேர்டைமென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரபாஸுடன் நடிகைகள் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), நிதி அகர்வால் (Nidhi Agarwal) மற்றும் ரித்தி குமார் போன்ற மூன்று நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது ஹாரர், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் நிறைந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் முக்கிய வில்லனாக லியோ படத்தில் நடித்த நடிகர் சஞ்சய் தத் (Sanjay Dutt) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியில் தமிழில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் 2வது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 2025-ல் அதிக பார்வைகளைப் பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல்… ஜிவி பிரகாஷின் எக்ஸ் தள பதிவு
தி ராஜா சாப் படத்தின் 2வது ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
#TheRajaSaabTrailer 2.0….
It’s more than what you expect…..the performances, the visuals and the music all come together for a spectacular experience this Sankranthi, January 9th, 2026 ❤️❤️❤️https://t.co/54dIYHJ5qO#Prabhas #TheRajaSaab pic.twitter.com/re429heeGP
— The RajaSaab (@rajasaabmovie) December 29, 2025
தி ராஜா சாப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படமானது உலகமெங்கும் 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் நிலையில், தமிழில் மட்டும் ஜனவரி 10ம் தேதியில் வெளியாகிறது. தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் 10ம் தேதியில் வெளியாகும் நிலையில், படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: ‘ஒரு சதவீதம் திருப்தி இல்லையென்றாலும்’.. தி ராஜா சாப் பட நிகழ்வில் சவால்விட்ட இயக்குநர்!
மேலும் இந்த படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த 2025 செப்டம்பர் மாதத்திலே வெளியாகியிருந்தது. மேலும் இப்படம் முதலில் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், பின் ஷூட்டிங் முடியாத காரணத்தால் 2026ம் ஆண்டு ஜனவரிக்கு தள்ளிவைத்து. தற்போது இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவரும் நிலையில், சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.