Prabhas: பிரபாஸின் பர்த்டே ஸ்பெஷல்… நாளை வெளியாகிறது புதிய படத்தின் டைட்டில் போஸ்டர்!

Hanu-Prabhas Movie: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்துவருபவர் பிரபாஸ். இவரின் முன்னணி நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவரும் நிலையில், சீதா ராமன் பட இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியாக்குவது குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

Prabhas: பிரபாஸின் பர்த்டே ஸ்பெஷல்... நாளை வெளியாகிறது புதிய படத்தின் டைட்டில் போஸ்டர்!

பிரபாஸின் புதிய திரைப்படம்

Published: 

22 Oct 2025 16:02 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் பிரபாஸ் (Prabhas). இவரின் முன்னணி நடிப்பில் தெலுங்கு மொழியில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் தி ராஜா சாப் (The Raja Saab). இந்த திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் ஜனவரி 10 ஆம் தேதியில்தான் வெளியாகிறது. 2026ம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதியில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) படம் வெளியாவதால், படக்குழு இந்த முடிவை எடுத்தாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வரிசையில் பிரபாஸ் நடித்துவரும் புதிய படமானது, தற்காலிகமாக “ஹனு-பிரபாஸ்” என அழைக்கப்பட்டுவருகிறது. இந்த படமானது மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் நிலையில், இப்படத்தில் பிரபாஸ் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை துல்கர் சல்மானின் “சீதா ராமம்” என்ற படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இயக்கிவருகிறார். இந்த படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், நாளை 2025 அக்டோபர் 23ம் தேதியில் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட நான் வரம் கேட்பேன் – வைரலாகும் சூரியின் தீபாவளி கொண்டட்ட வீடியோ

பிரபாஸின் புதிய படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

இந்த திரைப்படமானது இந்தி மற்றும் தெலுங்கு மொழியை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் நிலையில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மற்ற மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமானது ஆக்ஷ்ன், சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் ஸ்பை போன்ற கதைக்களத்தில் உருவாகிவருகிறதாம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துவருகிறார்.

இதையும் படிங்க: விஜய் – சூர்யா கூட்டணி.. ரீ- ரிலீசாகும் ‘ப்ரண்ட்ஸ்’ படம்.. எப்போது?

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் எடுப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், இப்படத்திற்கு “ஃபௌஜி” (Fauji) என்று டைட்டில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரபாஸின் புதிய படத்தின் டைட்டில் என்ன?

இந்த படத்தில் பிரபாஸ் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை இமாவி இஸ்மாயில் என்ற பாகிஸ்தானிய நடிகை நடித்துவருகிறார். இந்த படத்தின் டைட்டில் சமீப காலமாக இணையதளங்களில் வைரலாகிவருகிறது. அதன்படி இப்படத்தின் டைட்டில் ஃபௌஜி என்று கூறப்படும் நிலையில், சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அதை உறுதிபடுத்தியிருந்தார்.

டியூட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது பேசிய பிரதீப் ரங்கநாதன், பிரபாஸின் ஃபௌஜி படத்தின் முன்னோட்டத்தை பார்த்ததாகவும், மிகவும் அருமையாக வந்திருப்பதாகவும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.