பிரபல நடிகர் மதன் பாப் காலமானார் – ரசிகர்கள் இரங்கல்

Popular Tamil Comedian Madhan Bob Passes Away : உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், ஃபிரெண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் மதன் பாப். இவர் ஆகஸ்ட் 2, 2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகர் மதன் பாப் காலமானார் - ரசிகர்கள் இரங்கல்

மதன் பாப்

Updated On: 

02 Aug 2025 20:38 PM

தமிழ் சினிமாவில்  காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் மதன் பாப் (Madhan Bob).  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், ஃபிரெண்ட்ஸ் (Friends), துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களில் இவர் இடம் பெற்ற காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். குறிப்பாக அவரது சிரிப்பு தான் அவருக்கு ஹைலைட்டாக அமைந்திருந்தது. இந்த நிலையில் மதன் பாப் உடல் நலக்குறைவால்  அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் ஆகஸ்ட் 2, 2025 அன்று காலமானார்.  அவருக்கு வயது 71.  இதனையடுத்து அவருக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அடிப்படையில் இசைக் கலைஞரான மதன் பாப், ஆரம்பத்தில் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவை படத்தில் இசைக் கலைஞராகவே நடித்திருப்பார்.  அவருக்கு கமல்ஹாசனின் தேவர் மகன் படம் திருப்பு முனையாக அமைந்தது. தேவர் மகன் படத்தில் வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருந்தது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவருக்கு விக்ரமனின் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படிக்க : சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த தமிழ் படம் – தேசிய விருதுகளை குவித்த ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங்

திருப்புமுனையாக அமைந்த  பூவே உனக்காக படம்

அதுவரை குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த மதன் பாபை காமெடி நடிகராக மாற்றியது விக்ரமனின் பூவே உனக்காக திரைப்படம். அந்தப் படத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தார். குறிப்பாக ஃபிரெண்ட்ஸ், உன்னை நினைத்து, தெனாலி, கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழ் சினிமாவில் அவரது நடிப்பில் தனுஷின் ராயன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. தனது காமெடிகளின் மூலம் எப்போதும் நம்மை சிரிக்க வைத்த அவர் பெரும் சோகத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறார்.

நடிகர் மதன் பாப் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

 

இதையும் படிக்க : தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!

அவரது மகள் ஜனனியும் பிரபல பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. மணிசர்மா இசையில் சுறா படத்தில் நான் நடந்தால் அதிரடி உள்ளிட்ட பாடல்களை பாடயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்துள்ள அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கிறார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் மறைந்தாலும் அவரது சிரிப்பு ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.