கூலி படத்தின் மோனிகா பாடலைப் பாராட்டிய மோனிகா பெலூசி – நெகிழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே

Monica Song: நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து நாயகியாக நடித்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தின் மோனிகா பாடலைப் பாராட்டிய மோனிகா பெலூசி - நெகிழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே

மோனிகா பெலூசி, நடிகை பூஜா ஹெக்டே

Published: 

12 Aug 2025 13:38 PM

நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படத்தில் நடித்த நடிகர்களும் தொடர்ந்து புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் அமீர் கான், நாகர்ஜுனா, உப்பேந்திரா, சௌபின் ஷாகிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட உள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவி வைரலானது. காரணம் அவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜன நாயகன் படத்தில் நடிக்கும் போது இப்படி ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் என்பது தான். பின்பு நடிகை பூஜா ஹெக்டேவின் அந்த மோனிகா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது. இந்தப் பாடலுக்கு மோனிகா என்ற பெயர் பிரபல நடிகை மோனிகா பெலூசிக்காக வைக்கப்பட்டது என அனிருத் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதில் அவர் எனக்கும் லோகேஷ்க்கும் மோனிகா பெலூசி பிடிக்கும். அதனால் அந்தப் பாடலில் அந்தப் பெயர் இடம்பெற்றது என்று தெரிவித்து இருந்தார்.

மோனிகா பாடலைப் பார்த்து பாராட்டிய மோனிகா பெலூசி:

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போது, அந்த பேட்டியை எடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர் அனுபமா சோப்ரா நடிகை மோனிகா பெலூசி கூலி படத்தில் இருந்து வெளியான மோனிகா பாடலைப் பார்த்ததாகவும். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனைக் கேட்ட நடிகை பூஜா ஹெக்டே இதுதான் எனக்கு கிடைத்த பாராட்டுகளிலேயே மிகப் பெரியது. மோனிகா பெலூசிக்கு இந்தப் பாடல் பிடித்து உள்ளது என்பதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அந்தப் பேட்டியில் நடிகை பூஜா ஹெக்டே தெரித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… த்ரிஷாவின் சினிமா வளர்ச்சி குறித்து பெருமையாக பேசிய சிம்ரன்!

மேலும் கூலி படத்தில் வெளியான மோனிகா பாடலை இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததுடன் பாடவும் செய்துள்ளார். இவருடன் இணைந்து சுப்லக்ஷினி, அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். மேலும் இந்தப் பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது யூடியூபில் 68 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – முதல் படம் என்னனு தெரியுமா?