சைமா விருதுகளுடன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

Devi Sri Prasad: பான் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் வென்ற சைமா விருதுகளின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

சைமா விருதுகளுடன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் - இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

தேவி ஸ்ரீ பிரசாத்

Published: 

22 Sep 2025 15:32 PM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான தேவி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad). தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் இசையமைத்து வந்த தேவி ஸ்ரீ பிரசாத் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான இனிது இனிது காதல் இனிது என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, ரவி மோகன், விக்ரம், தனுஷ், கமல் ஹாசன், கார்த்தி, அஜித் குமார், சசிகுமார் மற்றும் விஷால் ஆகியோரின் படங்களில் தொடர்ந்து இசையமைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ரசிகர்களால் நெகட்டிவான விமர்சனத்தைப் பெற்றது. படத்தின் பின்னணி இசையால் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் பல கருத்துகள் நிலவி வந்தது.

இதனைத் தொடர்ந்து இறுதியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவான நடிகர் தனுஷின் குபேரா படத்திற்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சைமா விருதுகளுக்கு நன்றி சொன்ன தேவி ஸ்ரீ பிரசாத்:

அந்தப் பதிவில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளதாவது, இறுதியாக எனது சைமா விருதுகளை நான் காண்பிக்கிறேன். என் மீதும் என் இசை மீதும் எப்போதும் இவ்வளவு அன்பைப் பொழிந்ததற்கு மிக்க நன்றி சைமா. இந்த முறை புஷ்பா தி ரூலுக்கான சிறந்த இசை. தொடர்ந்து அந்தப் பதிவில் புஷ்பா படக்குழுவினருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நன்றி தெரிவித்து இருந்தார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… வதந்திகளை நம்பாதீர்கள்… துல்கர் சல்மான் சொன்ன விசயம்!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நான் ஒரு கதையை சொல்லி அத பிடிக்கலனு எந்த நடிகரும் சொன்னது இல்ல – இயக்குநர் அட்லி