ரவி மோகன் பிறந்த நாள் ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிடும் படக்குழு!

Actor Ravi Mohan: நடிகர் ரவி மோகன் இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் தற்போது நடித்து வரும் படங்களில் இருந்து ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.

ரவி மோகன் பிறந்த நாள் ஸ்பெஷல்... போஸ்டர்களை வெளியிடும் படக்குழு!

ரவி மோகன்

Published: 

10 Sep 2025 17:12 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் மோகன் ராஜா (Director Mohan Raja) இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் ரவி மோகன். ஜெயம் படத்தில் அறிமுகம் ஆனதால் இவரை அனைவரும் ஜெயம் ரவி என்றே அழைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு முதல் தன்னை தனது தந்தையின் பெயருடன் சேர்த்து ரவி மோகன் (Ravi Mohan) என்று அழைக்குமாறும் கேட்டுக் கோண்டார். அதனைத் தொடர்ந்து திரைத்துறையினரும் ரசிகர்களும் அவரை ரவி மோகன் என்றே அழைக்கத் தொடங்கினர். இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காதலிக்க நேரமில்லை படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுதடுத்து 4 படங்களில் நடித்து வருகிறார். இதில் அரசியல்வாதியாக கராத்தே பாபு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்ட்டு கராத்தே பாபு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

கராத்தே பாபு பட இயக்குநர் கணேஷ் பாபு எக்ஸ் தள பதிவு:

அதே போல நடிகர் ரவி மோகன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இதில் நடிகர் ரவி மோகன் நாயகனாக இல்லாமல் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு பராசக்தி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… எல்லா பெருமையும் லோகேஷ் கனகராஜைதான் சேரும் – நெகிழ்ந்து பேசிய டான்ஸ் மாஸ்டர் சாண்டி

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தனுஷ்கோடினு பெயர் வைக்க இதுதான் காரணம் – இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்!