வேட்டுவம் படத்தில் ஒரு வித்யாசமான தினேஷை பார்ப்பீங்க – இயக்குநர் பா ரஞ்சித்

Director Pa Ranjith talks about Vettuvam Movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பா ரஞ்சித். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் வேட்டுவம் படம் குறித்தும் அதில் நடிகர் தினேஷின் கதாப்பாத்திரம் குறித்தும் பேசியது வைரலாகி வருகின்றது.

வேட்டுவம் படத்தில் ஒரு வித்யாசமான தினேஷை பார்ப்பீங்க - இயக்குநர் பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித்

Published: 

15 Feb 2026 13:53 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பா ரஞ்சித். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டும் இன்றி தொடர்ந்து தயாரிப்பாளராக பலப் படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் பா ரஞ்சித் எழுதி இயக்கி இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தங்கலான். நடிகர் விக்ரம் நாயகனாக நடித்த இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் வேட்டுவம். இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஷோபிதா துலிபா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. முன்னதாக இந்தப் படத்தில் இருந்து நடிகர் தினேஷின் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் இயக்குநர் பா ரஞ்சித் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வேட்டுவம் படத்தில் ஒரு வித்யாசமான தினேஷை பார்ப்பீங்க:

வேட்டுவம் திரைப்படம் தினேஷை அவரது வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சாயலில் காண்பிக்கும். இந்த படத்தில், அவர் இளைய தோற்றத்தில் தோன்றுவார், மேலும் இந்த பாத்திரத்தில் நடிக்க தற்காப்பு கலைகள் மற்றும் போர் நுட்பங்களில் பயிற்சி பெற்றுள்ளார். கதை ஐந்து முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்றொன்றை ஒரு போட்டியாளராகப் பார்க்கும்.

ஒருவர் இன்னொருவருக்கு வில்லனாகவும், நேர்மாறாகவும் இருக்கும் உலகம் இது. இந்த படத்தில் ஆர்யா எதிர்மறையான வேடத்தில் காணப்படுவார். சோபிதா துலிபாலா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையில் ஐந்து குழுக்கள் உள்ளன, ஒவ்வொன்றிலும் ஒரு தலைவர் இருக்கிறார், மேலும் அவர் அந்தக் குழுக்களில் ஒன்றின் தலைவராக இருப்பார் என்றும் பா ரஞ்சித் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read… Karthik Subbaraj: எனது அடுத்த திரைப்படம் இதுதான்? மகான் 2 படம் எப்போது உருவாகும் – கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்!

இணையத்தில் வைரலாகும் பா ரஞ்சித் பேச்சு:

Also Read… காதலர் தின ஸ்பெஷலாக போஸ்டர் வெளியிட்ட ஹேப்பி ராஜ் படக்குழு

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?