வேட்டுவம் என்ன மாதிரியான படமாக இருக்கும் – இயக்குநர் பா ரஞ்சித் ஓபன் டாக்
Pa Ranjith: கோலிவுட் சினிமாவில் சமூகம் சார்ந்த பிரச்னைகளை மையமாக வைத்து படங்களை இயக்கும் இயக்குநர்களின் பட்டியளில் உள்ளவர் இயக்குநர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் தற்போது உருவாக உள்ள படம் வேட்டுவம். இந்தப் படம் குறித்து இயக்குநர் பா ரஞ்சித் சமீபத்தில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இயக்குநர் பா ரஞ்சித்
தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையோடு வலம் வருபவர் இயக்குநர் பா ரஞ்சித் (Director Pa Ranjith). இவர் இயக்குநராக இயக்கிய படங்கள் மட்டும் இன்றி தயாரிப்பாளராக தயாரிக்கும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதில் குறிப்பாக இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். மிகாவும் ஜாலியான படமாக இருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் மட்டும் தான் காமெடியை மையமாக வைத்து வெளியானது. இதைத் தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் சமூகம் சார்ந்த பிரச்னைகளை மையமாக வைத்து இருந்தது. இந்தப் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன்படி அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், கபாலி, காலா, சார்பாட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தங்கலான் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் அடுத்ததாக இயக்க உள்ள படம் வேட்டுவம். இதில் நடிகர்கள் ஆர்யா மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்டுவம் படம் சயின்ஸ் ஃபிக்சன் படமாக இருக்கும்:
இயக்குனர் பா. ரஞ்சித் தனது வரவிருக்கும் திரைப்படமான வேட்டுவம் ஒரு அறிவியல் புனைகதை எதிர்கால நாடகமாக இருக்கும் என்றும், இது அவரது கதைசொல்லலில் ஒரு துணிச்சலான புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் தினேஷ், ஆர்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அதன் நட்சத்திர நடிகர்கள் மற்றும் எதிர்கால கருப்பொருளுடன், வேட்டுவம் ஒரு புதிய மற்றும் சிலிர்ப்பூட்டும் சினிமா அனுபவத்தை வழங்கும் என்று உறுதியளித்துள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சிவகார்த்திகேயனின் அந்த குணங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு – இயக்குநர் சுதா கொங்கரா
இயக்குநர் பா ரஞ்சித் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Fold your fists & fight the rest!
Wishing our @vr_dineshravi, an adventurous birthday.#PaRanjith8 – https://t.co/St1icHhT25
Shooting in progress@beemji @officialneelam @LearnNteachprod #SaiDevanand #SaiVenkateswaran @arya_offl @vr_dineshravi @sobhitaD @KalaiActor @mimegopi… pic.twitter.com/PKOVi88VrK— pa.ranjith (@beemji) September 27, 2025
Also Read… சிம்புவிற்கு அரசன் படத்தில் வில்லனாகும் கன்னட நடிகர் – வைரலாகும் தகவல்