லோகேஷ் கனகராஜ் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட டிசி படக்குழு!
Director Lokesh Kanagaraj's birthday Special Poster: தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது டிசி படத்தில் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

டிசி
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அறிமுகமான முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய கைதி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது அவர் நாயகன் அவதாரமும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி லோகேஷ் கனகராஜ் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் டிசி.
இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். படத்தினை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
லோகேஷ் கனகராஜ் பர்த்டே ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட டிசி படக்குழு:
இந்த நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் இன்று பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் டிசி படத்தின் போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படங்களின் அப்டேட் மற்றும் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பாடகி ஸ்ரேயா கோஷல் பர்த்டே ஸ்பெஷல்… ஜெய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Team #DC wishes, our Devadas @Dir_Lokesh, a very happy birthday!@ArunMatheswaran @anirudhofficial @WamiqaG @isanjkayy @mukesh_DOP #PrasannaGK #KannanS @PC_stunts @kabilanchelliah pic.twitter.com/DnlheJZsGo
— Sun Pictures (@sunpictures) March 14, 2026