பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிவின் பாலி – வைரலாகும் தகவல்
Actor Nivin Pauly : மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவர் தமிழ் சினிமாவில் லோகோஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் உருவாகும் பென்ஸ் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்துள்ள நிலையில் தனது படப்பிடிப்பை முடித்துள்ளார்.

நிவின் பாலி
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலமாகத்தான் நடிகை சாய் பல்லவி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நிவின் பாலி தற்போது தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்துள்ளார். முன்னதாக சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ஆனால் முதன்முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்கிறார். அதுவும் ரத்தம் சொட்ட சொட்ட நடிகர் நிவின் பாலியின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
பென்ஸ் படத்தின் படப்பிடிப்பை முடித்த நிவின் பாலி:
அதன்படி இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் படத்தின் ஷூட்டிங்கை நடிகர் நிவின் பாலி முடித்துள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்திற்கு கதையை எழுதியுள்ளர். தொடர்ந்து இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்சில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… வடசென்னை மற்றும் அரசன் படங்கள் குறித்து ரசிகரின் ஒப்பீடு – வியந்து பேசிய வெற்றிமாறன்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Nivin Pauly – Benz Movie Update 🚘🎬
Actor #NivinPauly has completed the shooting of his upcoming film #Benz. 🎉🎥
This film has now been officially connected to the #LCU (Lokesh Cinematic Universe). 🔥🌌#RaghavaLawrence pic.twitter.com/pUnhSLKVu0
— Movie Tamil (@_MovieTamil) November 22, 2025
Also Read… ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் படக்குழு – வைரலாகும் வீடியோ