Nithya Menen: இந்த முழு விஷயமும் கவிதையாக இருந்தது.. இட்லி கடை பட ஷூட்டிங் குறித்து நித்யா மேனன்!

Nithya Menen: பான் இந்திய மொழில் படங்களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நித்யா மேனன். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் இட்லி கடை. இப்படத்தின்போது தேசிய விருது பெற்ற அனுபவம் மற்றும் ஷூட்டிங் அனுபவம் பற்றியும் நித்யா மேனன் பகிர்ந்துள்ளார்.

Nithya Menen: இந்த முழு விஷயமும் கவிதையாக இருந்தது.. இட்லி கடை பட ஷூட்டிங்  குறித்து நித்யா மேனன்!

நித்யா மேனன்

Published: 

26 Oct 2025 22:36 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் நித்யா மேனன் (Nithya Menen). அதிலும் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் மிகவும் பிரபலமானவர். இவரின் நடிப்பில் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் மட்டுமே 2 படங்கள் வெளியாகியிருந்தது. விஜய் சேதுபதியுடன் (Vijay Sethupathi) தலைவன் தலைவி (Thalaivan Thalavii) மற்றும் தனுஷுடன் (Dhanush) இட்லி கடை (Idli Kadai) போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்த தலைவன் தலைவி திரைப்படமானது சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இவரின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம்தான் இட்லி கடை.

இந்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது தேசிய விருது பெற்ற அனுபவம் பற்றியும், இட்லி கடை ஷூட்டிங்கில் நடந்த அழகான தருணம் பற்றியும் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இதுவரைக்கு அந்த மாதிரி படத்தில் நடித்ததில்லை.. இதுவே முதல் தடவை – ஆர்யா சொன்ன விஷயம்!

இட்லி கடை படம் குறித்து நித்யா மேனன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

அந்த இன்ஸ்டாகிராம் பதிவு நடிகை நித்யா மேனன், “இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 1 வருடம் ஆகிறது. நான் இட்லி கடை படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் தேசிய விருது விழாவிற்கு சென்றேன். என்னுடைய கையில் மண்ணுடனும், இதற்கு முன்பு நடந்த முந்தைய நாளில் ஷூட்டிங்கிற்காக எனது கையில் மாட்டு சாணத்தையும் எடுத்திருந்தேன். இந்த விஷயங்கள் அனைத்தும் எனக்கு கவிதை போலவே இருந்தது.

இதையும் படிங்க : துப்பாக்கி சூடு பயிற்சியில் அஜித் குமார் தீவிரம்… வைரலாகும் வீடியோ இதோ!

எனது நகங்களில் மாட்டு சாணத்துடன்தான் ஜனாதிபதி கைகளில் இருந்து தேசிய விருதை வணங்கினேன். இதை என்னுடைய நண்பர்களிடம் கூறியிருக்கிறேன். மேலும் இந்த இட்லி கடை படத்தில் என்னுடன் பணியாற்றியதற்காக எனது ஊழியர்களுக்கு பாராட்டு” என அந்த பதிவில் இட்லி கடை படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சிறந்த அனுபவம் பற்றி நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

இட்லி கடை திரைப்படம் :

நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம்தான் இட்லி கடை. இதில் நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில் மக்களிடையே பீல் குட் படம் என நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.