தளபதி விஜய் முதல் சூர்யா வரை ஜோடி.. இந்த கியூட் சிறுமி எந்த நடிகை-னு தெரியுமா?

South Indian Actress Childhood photo : இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவருவது வழக்கமே. அந்த விதத்தில் இந்த போட்டோவில் கியூட்டாக இருக்கும் சிறுமி எந்த நடிகைன்னு தெரியுமா?. முழு விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

தளபதி விஜய் முதல் சூர்யா வரை ஜோடி.. இந்த கியூட் சிறுமி எந்த நடிகை-னு தெரியுமா?

நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம்

Published: 

10 Apr 2026 08:33 AM

 IST

தமிழ் சினிமாவில் (Tamil Cinema) பல உச்ச நடிகைகள் நடித்துவருகிறார். குறிப்பாக பல மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் உச்ச கதாநாயகியாக இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிவருகிற்து. அந்த விதத்தில் மேலே உள்ள போட்டோவில் கியூட்டாக, தலையில் பூ வைத்திருக்கும் சிறுமி எந்த நடிகை என தெரியுமா?. இவர் மலையாள சினிமாவிலிருந்து (Malayalam Cinema) தமிழ் சினிமாவிற்கு வந்தவர். இவர் சிறுவயதிலே சினிமாவில் நடிக்க தொடங்கிய நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என பான் இந்திய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். ஆரம்பகாலத்தில் ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் நுழைந்தார். இவர் தனது சிறுவயதிலே சினிமாவில் நுழைந்த நிலையில், இவரின் மூலம் மக்களுக்கு பிரபலமானதுதான்.

இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya), தனுஷ் (Dhanush) என பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார். அதில் தனுஷ் மற்றும் இவரின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருந்தது. இதுவரை இரு படங்களில் மட்டுமே தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்போது இந்த சிறுமி யார் என தெரிந்திருக்குமே. அட இந்த சிறுமி நடிகை நித்யா மேனன்தான் (Nithya Menen).

இதையும் படிங்க: அந்த ரெண்டு காட்சிகள் LIK படத்தோட ஹைலைட்டாக இருக்கும் – எஸ்.ஜே.சூர்யா பேச்சு!

நடிகை நித்யா மேனன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை நித்யா மேனன் கடந்துவந்த சினிமா பாதை:

நடிகை நித்யா மேனன் தனது சிறுவயதிலே ஹனுமான் என்ற ஆங்கில படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இதில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே. 7 ஓ கிளாக் என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் துணை நடிகையாக நுழைந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவே, 2008ம் ஆண்டில் ஆகாஷ கோபுரம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இதில் மோகனலுக்கு ஜோடியாக நடித்து லீட் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை அடுத்ததாக தொடர்ந்து மலையாள திரைப்படங்கள் அவருக்கு அமைந்தது.

இதையும் படிங்க: எங்க திருமண வாழ்க்கை சுமூகமாக இருப்பதற்கு சீக்ரட் இதுதான் – ரகசியம் பகிர்ந்த சுந்தர் சி மற்றும் குஷ்பு!

மேலும் தமிழில் 2011ம் ஆண்டில் வெளியான வெப்பம் என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இவ்வாறு தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் தொடந்து நடித்துவந்தார். இவ்வாறு இவர் பல்வேறு நடிகர்களுடன், பல்வேறு மொழிகளில் படங்களில் இணைந்து நடித்துள்ளார். அந்த வரிசையில் இவர் இறுதியாக தமிழில் இட்லி கடை என்ற படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?