ஹாரர் காமெடியில் ஒரு படம் பார்க்கணுமா? நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ் படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!
Nellikkampoyil Night Riders Movie OTT Update: மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ளவர் நடிகர் மேத்யூ தாமஸ். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ்
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் மேத்யூ தாமஸ். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வரும் நடிகர் மேத்யூ தாமஸ் அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாள சினிமாவில் மேத்யூ தாமஸ் நாயகனாக நடித்து கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ். ஹாரர் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் நௌஃபல் அப்துல்லா இயக்கி உள்ளார். மேலும் சுனு ஏ. வி. மற்றும் ஜோதிஷ் எம். ஆகியோர் இணைந்து இந்த நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ் படத்திற்கு திரைக்கதையை எழுதி இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் மேத்யூ தாமஸ் உடன் இணைந்து நடிகர்கள் ஆதிநாத்,
ரோஷன் ஷானவாஸ், சரத் சபை, மீனாட்சி உன்னிகிருஷ்ணன், மெரின் பிலிப், விஷ்ணு அகஸ்தியர், பிரேமலதா, சைத்ரா பிரவீன், ரோனி டேவிட், அபு சலீம், நௌஷாத் அலி, ஜினில் ஜைனுதீன், நசீர் சங்கராந்தி, ரஞ்சித் கன்கோல், வையாபுரி, தம்பாய், ஜிலு ஜோசப், ராம்ஷி, உன்னி, விஜயா, தங்கம், அனி, ராய் தாமஸ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள் நேஹா நாயர் மற்றும் யக்சான் கேரி பெரேரா ஆகியோர் இணைந்து இசையமைத்து இருந்தனர். படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ் படத்தின் கதை என்ன?
நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ் படத்தில் இருட்டு என்றாலே பயப்படும் நபராக உள்ளார் நாயகன் மேத்யூ தாமஸ். இவரது சொந்த ஊரில் பல அமானுஷ்ய விசயங்கள் நடைபெறுகிறது. இப்படி இருக்கும் சூழலில் மேத்யூ தாமஸ் காதலிக்கும் பெண்ணிடம் குதிரைக் கால் கொண்ட ஒரு உருவம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சிக்கின்றது.
Also Read… கார்த்தியின் கைதி 2 திரைப்படம் உருவாகிறதா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
அன்று இரவுதான் மேத்யூ தாமஸின் காதலி வீட்டில் யாரும் இல்லை என்று அவரை வீட்டிற்கு அழைத்து இருந்தார். ஆனால் அவருக்கு இருட்டு பயம் இருப்பதால் அன்று இரவு வரவில்லை. இந்த விசயம் தெரிந்ததும் காதலி அவரை விட்டுவிட்டு ஒரு போலீசாரை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.
இப்படி இருக்கும் சூழலில் அந்த குதிரைக் காலுக்கு சொந்தமான நபர் யார் என்பதை அறிந்துகொள்ள நாயகன் மேத்யூ தாமஸ் முயற்சி செய்கிறார். இறுதியில் அவர் எப்படி அந்த குதிரைக்கால் நபரை கண்டுபிடித்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… KH x RK Movie: கமல்ஹாசன்- ரஜினிகாந்த் கூட்டணி பட புரோமோ வீடியோ எப்போது?- அறிவிப்பு இதோ!