மல்லிகைப்பூ வைத்ததால் ரூ.1.14 லட்சம் அபராதம்.. ஷாக் தகவலை சொன்ன மலையாள நடிகை!
Navya Nair: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் சில படங்களில் நடித்தவர் நடிகை நவ்யா நாயர். இவர் சமீபத்தில் வெளி நாட்டிற்கு சென்ற போது அங்கு மல்லிப் பூ தலையில் இவர் வைத்திருந்ததால் இவருக்கு 1.14 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நவ்யா நாயர்
மலையாள சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நவ்யா நாயர் (Actress Navya Nair). அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் பலப் படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவில் அறியப்படும் நடியையாக உள்ள நிலையில் மலையாளத்தில் மட்டும் இன்றி தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் சிலப் படங்களில் நடித்துள்ளார். அதன்படி 2001-ம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகையாம அறிமுகம் ஆன நவ்யா நாயர் தொடர்ந்து 2004-ம் ஆண்டு வரை மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான அழகிய தீயே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். ராதா மோகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை பிரகாஷ் ராஜ் தயாரித்து இருந்த நிலையில் அவர் ஒரு முக்கிய வேடத்திலும் இந்தப் படத்தில் நடித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியாக நடித்து வந்த நவ்யா நாயர் அவ்வபோது தமிழ் சினிமா பக்கமும் வந்து சென்றார். அந்த வகையில் நடிகை நவ்யா நாயர் இறுதியாக வெளியான படம் ரசிக்கும் சீமானே. 2010-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை நவ்யா நாயர் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படம் தான் நடிகை நவ்யா நாயர் தமிழ் சினிமாவில் இறுதியாக நடித்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை நவ்யா நாயார்.
மல்லிப்பூ வச்சதுக்கு ரூ.1.14 லட்சம் அபராதமா? ஷாக்கான நடிகை
இந்த நிலையில் நடிகை நவ்யா நாயர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார். சமீபத்தின் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்த்திரேலியாவில் உள்ள மெல்பர்னுக்கு விழா ஒன்றிற்காக நடிகை நவ்யா நாயர் சென்றுள்ளார்.
அவர் செல்லும் போது அவரது தந்தை வாங்கி கொடுத்த மல்லிகை பூவில் பாதியை தனது தலையில் வைத்துக்கொண்டு மீதியை தான் கொண்டு சென்ற கைப்பயில் வைத்து சென்றுள்ளார். இதுகுறித்து பேசிய நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியாவில் மல்லிகைப் பூவிற்கு தடை என்பது எனக்கு தெரியாது. நான் மெல்பர்ன் விமான நிலையத்தை அடைந்த உடன் அங்கு இருந்த அதிகாரிகள் என் தலையில் இருந்த மல்லிகைப்பூவை பார்த்துவிட்டனர்.
Also Read… வசூலில் பட்டையை கிளப்பும் லோகா படம்… இதுவரை வசூலித்தது எவ்வளவு?
15 செ.மீ பூவிற்காக எனக்கு இந்திய ரூபாய் மதிப்பின் படி ரூபாய் 1.14 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை 28 நாட்களுக்குள் நான் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது பரவி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
நடிகை நவ்யா நாயரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… வெளியானது செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!