டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் நானி!

Actor Nani Praised Tourist Family Movie Director: தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த நிலையில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து நடிகர் நானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் நானி!

நடிகர் நானி மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Published: 

14 Jun 2025 14:35 PM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevind) இந்தப் படத்தை இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் (Sasikumar) நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், ரமேஷ் திலக், யோகி பாபு, பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். பொருளாதார சிக்கல் காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் வந்த குடும்பத்தை சுற்றியே இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. மிகவும் சீரியசான டாபிக்கை யார் மனதையும் கனம் ஆக்காமல் ஃபீல் குட் படமாக இதை இயக்கி இருந்தார் இயக்குநர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் மட்டும் இன்றி பிரபலங்களிடமும் தொடர்ந்து வாழ்த்துகளைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்களும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்துவிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்துப் பாராட்டிய நானி:

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நேச்சுரல் ஸ்டாராக வலம் வரும் நடிகர் நானி சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்துள்ளார். அதன் பிறகு இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார் அது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அது மட்டும் இன்றி சமீபத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும் போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் உள்ள பாடலை ஆட்டோ ஓட்டுநர் கேட்டுக்கொண்டே ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அவரிடம் பேச்சு கொடுத்த இயக்குநர் படத்தைப் பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த அந்த ஆட்டோ ஓட்டுநர் மூன்று முறை திரையரங்கில் சென்று பார்த்தேன். அந்தப் படம் மிகவும் மனதிற்கு நெறுக்கமாக இருந்தது. அந்தப் படத்தில் உள்ள சசிகுமாரின் குணமும் எனது தந்தையின் குணமும் ஒன்றே. அதன் காரணமாகவே அந்தப் படத்தை மூன்று முறை தியேட்டரில் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

அப்போது முகத்தில் மாஸ்க் அணிந்து இருந்த இயக்குநர் மாஸ்கை கழட்டிவிட்டு தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநர் மனம் நெகிழ்ந்து தன்னை பாராட்டியதாக அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்து இருந்தார். இதுவும் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அபிஷன் ஜீவிந்த் இன்ஸ்டாகிராம் பதிவு:

Related Stories
Suriya47: சிங்கம் இஸ் பேக்.. போலீஸ் அதிகாரி வேடத்தில் சூர்யா. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!
Kombuseevi: சரத்குமார் – சண்முக பாண்டியனின் அதிரடி கதையில்… கொம்புசீவி படம் எப்படி இருக்கு.. விமர்சனங்கள் இதோ!
கூட்டத்தில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்… விசாரணையில் இறங்கிய போலீஸ்!
Sigma Movie: ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ஷூட்டிங் ஓவர்.. முதல் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
முடிஞ்சா மிதி.. வித்தியாசமாக நடந்த பிக் பாஸ் வீட்டு தல டாஸ்க்.. FJ – விக்ரம் இடையே மோதல்… வைரலாகும் புரோமோ
உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?