சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனக்கு முதலில் ஜோடியாக நடித்தது அந்த பிரபல நடிகைதான் – மிஷ்கின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Actor Mysskin: தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநராக இருந்த மிஷ்கின் தற்போது நடிகராக ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் முன்னதா மிஷ்கின் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை குறித்து பேசியது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனக்கு முதலில் ஜோடியாக நடித்தது அந்த பிரபல நடிகைதான் - மிஷ்கின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

சூப்பர் டீலக்ஸ்

Published: 

11 Sep 2025 07:30 AM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் மிஷ்கின் (Director Mysskin). இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் மிஷ்கின். அதனைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைகோ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இறுதியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைகோ படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களை இயக்கி வந்த மிஷ்கின் அவரது இயக்கத்தில் வெளியான நந்தலாலா படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல இயக்குநர்களின் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், மாவீரன், லியோ, வணங்கான், ட்ராகன் மற்றும் ஓஹோ எந்தன் பேபி என தொடர்ந்து பலப் படங்களில் நடித்துள்ளார். இதில் சிலப் படங்களில் சிறப்பு கதாப்பாத்திரத்திலும் சில படங்களில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய மிஷ்கின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் முதலில் எனக்கு ஜோடியா நடிச்சது நதியா:

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகர் மிஷ்கின் மூட நம்பிகையால் குடும்பத்தை விட்டு விலகி இருப்பார். அவரது மனைவி மற்றும் மகனைக்கூட கவனிக்காமல் இருப்பார். இப்படி இருக்கும் மிஷ்கினின் மனைவியாக படத்தில் நாம் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்ததை பார்த்தோம்.

ஆனால் அந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னதாக நடிகை நதியா தான் நடித்துள்ளார். அந்தப் படத்தில் மிஷ்கினை அடிக்கும் காட்சியில் நடிகை நதியா உண்மையாகவே அடித்தாராம். ஆனால் கதையில் பிரச்சனையோ அல்லது படக்குழுவினருடன் எதேனும் பிரச்னையா தெரியல பாதியிலேயே படத்தில் நடிக்க மாட்டேன் என்று அவர் சென்றுவிட்டார். அதன் பிறகே நடிகை ரம்யா கிருஷ்ணனை அந்தப் படத்தில் நடித்தார் என்று மிஷ்கின் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… குட் பேட் அக்லி படத்தில் வில்லனா நடிக்க ஒரே காரணம் இதுதான் – அர்ஜுன் தாஸ் சொன்ன சீக்ரெட்

இயக்குநர் மிஷ்கினின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர்களே பாட்டு பாடிட்டா சிங்கர்ஸ்க்கு வாய்ப்பு இல்லாம போகுதே – வைரல் பாடகர் சத்யன் சொன்ன விசயம்!