தொடர்ந்து ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைப்பதற்கு என்ன காரணம்? அனிருத் விளக்கம்

Anirudh Ravichander talks about working on Rajinikanth Movies: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொடர்ந்து ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைப்பதற்கு என்ன காரணம்? அனிருத் விளக்கம்

அனிருத் மற்றும் ரஜினிகாந்த்

Published: 

03 Mar 2026 10:43 AM

 IST

தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக மக்களிடையே அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் ஒரு வகையில் நடிகர் ரஜினிகாந்தின் உறவினர் ஆவார். அதன்படி ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் தம்பி ரவிசந்தரின் மகன் தான் இசையமைப்பாளர் அனிருத். அதன் காரணமாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக அறிமுகம் ஆன 3 படத்தின் மூலமாக அனிருத் இசையமைப்பாளர் அனிருத் அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் தமிழ் படங்களில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தில் இருந்து இசையமைக்க தொடங்கிய அனிருத் தற்போது வரை தொடர்ந்து அவரது படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதன்படி பேட்ட படம் தொடங்கி இதுவரை ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான 6 படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார் அனிருத் ரவிசந்தர். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்களுக்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரே இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து வெளிப்படையா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொடர்ந்து ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைப்பதற்கு என்ன காரணம்?

அதன்படி அனிருத்திடம் பேட்டி ஒன்றில் நீங்கள் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றி வருகிறீர்கள். அது அவருடைய விருப்பமா அல்லது அதுவே இயல்பாகவே நடக்கிறதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த  அனிருத், அதற்குக் காரணம் இயக்குநர்களின் கூட்டணிதான்.

முதல் படம் பேட்ட அதனைத் தொடர்ந்து நாங்கள் ஒவ்வொரு முறை கைகோர்க்கும்போதும், முந்தைய படத்தை விட ஒரு பெரிய வெற்றியைப் பெற விரும்புகிறேன். இதுவரை, நாங்கள் அதை அடைந்துள்ளோம். நாங்கள் அதே வழியில் தொடர வேண்டும். நாங்கள் முயற்சியையும் கடின உழைப்பையும் செலுத்தினால், அதை மீண்டும் அடைவோம் என்றும் என்றும் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ்… இதுதான் சூர்யா 46 படத்தின் டைட்டில்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரியோ ராஜ் – வெளியானது அறிவிப்பு

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ