படத்திற்காக புது விசயத்தைக் கற்றுக்கொண்ட நடிகை மிருணாள் தாக்கூர் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
Mrunal Thakur: சின்னத்திரை சீரியல்களில் நாயகியாக நடித்து பிரபலம் ஆகி பின்பு வெள்ளித்திரையில் தற்போது நாயகியாக கலக்கி வருபவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள சன் ஆஃப் சர்தார் 2 படத்திற்காக அவர் புதிதாக ஒரு விசயத்தைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

நடிகை மிருணாள் தாக்கூர்
நடிகை மிருணாள் தாக்கூர் (Mrunal Thakur) கடந்த 2012-ம் ஆண்டு முதல் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இந்தி சீரியல்களில் இவர் நடித்த பல சீரியர்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு மராத்தி மொழியில் உருவான ஹெல்லோ நந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார் நடிகை மிருணாள் தாக்கூர். தொடர்ந்து இந்தி மொழியில் பலப் படங்களில் நட்டித்த நடிகை மிருணாள் தாக்கூருக்கு பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் சீதா ராமம் தான். தெலுங்கு சினிமாவில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் மிருணாள் தாக்கூர்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகை மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான ஹாய் நானா, தி ஃபேமிலி ஸ்டார், கல்கி ஏடி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார் நடிகை மிருணாள் தாக்கூர்.
சன் ஆஃப் சர்தார் 2 படத்திற்காக மிருணாள் தாக்கூர் கற்றுக் கொண்ட புது விசயம்:
இந்தி சினிமாவில் தற்போது இயக்குநர் விஜய் குமார் அரோரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சன் ஆஃப் சர்தார் 2. இந்தப் படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் மிருணாள் தாக்கூர், ரவி கிஷன் மற்றும் சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த சன் ஆஃப் சர்தார் 2 படத்திற்காக தான் டோல் அடித்து ஆட கற்றுக் கொண்டதாகவும், படத்திற்கக புதுப் புது விசயங்களைக் கற்றுக் கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை மிருணாளின் இன்ஸ்டா பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
இணையத்தில் கவனம் பெரும் மிருணாள் தாக்கூரின் இன்ஸ்டா பதிவு: