சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகும் மோகன்லாலின் மகள் – வைரலாகும் போஸ்ட்

Vismaya Mohanlal: மலையாள சினிமாவில் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருவபர் நடிகர் மோகன்லால். இவரது மகன் பிரணவ் மோகன்லால் தற்போது மலையாள சினிமாவில் நாயகனாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இவரது மகள் விஸ்மயா மோகன்லால் தற்போது நாயகியாக அறிமுகம் ஆகவுள்ளார்.

சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகும் மோகன்லாலின் மகள் - வைரலாகும் போஸ்ட்

விஸ்மயா மோகன்லால்

Published: 

01 Jul 2025 19:44 PM

மலையாள சினிமாவில் சுமார் 1980-ம் ஆண்டு முதல் நடிகராக நடித்து வருபவர் நடிகர் மோகன்லா (Actor Mohanlal). சுமார் 45 ஆண்டுகள் நடிகராக மட்டும் இன்றி தனது ஸ்டார் அந்தஸ்தை விட்டுகொடுக்காமல் நடித்து வருகிறார் மோகன்லால். இளம் நடிகர்களே மிரண்டு போகும் அளவிற்கு படங்களில் இவரின் நடிப்பு மாஸாக உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் திரையரங்கை அதிரவைக்கும் அளவிற்கு உள்ளது. தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். முன்னதாக நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் (Pranav Mohanlal) மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகியுள்ள நிலையில் தற்போது மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் நடிகையாக அறிமுகம் ஆக உள்ளார்.

இது குறித்து நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அன்புள்ள மாயாக்குட்டி, உங்கள் துடக்கம் திரைப்படம் சினிமா மீதான உங்கள் வாழ்நாள் காதலின் முதல் படியாக இருக்கட்டும். இந்தப் படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் ஆஷிர்வாட் சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் படத்தை தயாரித்துள்ளார்” என்று தெரிவித்து இருந்தார்.

மகள் நாயகியாக அறிமுகம் ஆவது குறித்து நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

எழுத்தாளராக சினிமாவில் திரைக்கு பின்னால் பணியாற்றி வந்த மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் தற்போது நாயகியாக நடிக்க உள்ளார். மோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரின் பிள்ளைகள் இருவருமே நடிகர்களாக தங்களை அடையாளபடுத்திக்கொள்வது ஒரு நடிகராகவும் அப்பாவாகவும் மோகன்லாலுக்கு பெருமையான விசயமாகவே உள்ளது.

மலையாள சினிமாவில் பிரணவ் மோகன்லால் இதுவரை நடித்தப் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தாலும் அவர் அதிக அளவில் படங்களில் நடிப்பது இல்லை. இது ரசிகர்களுக்கு வருத்தமான விசயமாகவே உள்ளது. இயற்கையின் மீதும் எளிமையின் மீதும் தீராக் காதல் கொண்ட பிரணவ் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்துவது வழக்கமாகவே உள்ளது.