மோகன்லாலின் பீரியட் ஆக்‌ஷன் படமான விருஷபா ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்!

Mohanlal: நடிகர் மோகன்லால் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வரும் நிலையில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளப் படம் விருஷபா. இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மோகன்லாலின் பீரியட் ஆக்‌ஷன் படமான விருஷபா ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்!

விருஷபா

Published: 

09 Oct 2025 17:58 PM

 IST

மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் மோகன்லால் (Actor Mohanlal). இவரது நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 3 படங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி முதலாவதாக மார்ச் மாதம் நடிகர் மோகன்லால் நடிப்பில் எல்.2 எம்புரான் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முன்னதாக வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கேரள பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் வந்த போது வசூல் சாதனைப் படத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் துடரும். இந்தப் படத்திலும் நடிகர் மோகன்லால் ஆக்‌ஷன் நாயகனாக நடித்து இருந்தார். இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான இந்தப் படமும் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ஹிருதயப்பூர்வம். ஃபீல் குட் படமாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் சத்யன் ஆதிகடவூர் இயக்கி இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நவம்பர் மாதம் வெளியாகும் மோகன்லாலின் விருஷபா படம்:

இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் 4-வதாக வெளியாக உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குநர் நந்தன் கிஷோர் எழுதி இயக்கி உள்ள படம் விருஷபா. இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சரிகா, அஜய், அலி, நேஹா சக்சேனா, சித்திக், வினய் வர்மா, ராமச்சந்திர ராஜு என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற நவம்பர் மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… காமெடி ட்ராமா பிடிக்குமா? அப்போ இந்தியில் இந்த பதாய் ஹோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்

நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… லைஃப்ல நீ ஒரு விசயத்த லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணா… டியூட் படத்தின் ட்ரெய்லர் இதோ!