ஏப்ரல் மாதம் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போனது த்ரிஷ்யம் 3 படம் – மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
Drishyam 3 movie release has been postponed from April to May: நடிகர் மோகன்லால் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் த்ரிஷ்யம் 3. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

த்ரிஷ்யம் 3
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். மலையாள சினிமாவின் அடையாளம் என்றே இவரை குறிப்பிட்டு வருகின்றனர். இவரது பிள்ளைகள் தற்போது சினிமாவில் நடிகர்களாக நடித்து வரும் நிலையில் தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் மோகன்லா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மோகன்லால் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி கடந்த 2925-ம் ஆண்டில் படம் வரிசைக்கட்டி வெளியானது போல இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாக வரிச்சைக்கட்டி காத்திருக்கின்றது.
அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து 5 படங்களுக்கு மேல் வெளியாக உள்ளது. அதில் சில கேமியோ வேடங்களிலும் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் சினிமாவிலும் படங்கள் வெளியாக உள்ளது. இதில் முதலாவதாக நடிகர் மோகன்லால் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு வெளியாக உள்ள படம் த்ரிஷ்யம் 3. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
ஏப்ரல் மாதம் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போனது த்ரிஷ்யம் 3 படம்:
இந்த த்ரிஷ்யம் படத்தின் 2 பாகங்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது மூன்றாவது பாகமும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த த்ரிஷ்யம் படத்தின் வெளியீட்டு தேதி முன்னதாக ஏப்ரல் மாதம் 2-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மே மாதம் 21-ம் தேதி 2026-ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மோகன்லால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது கடந்த காலம் ஒருபோதும் மௌனமாக இருப்பதில்லை… அது காத்திருக்கிறது, அவ்வளவுதான் என்று அந்தப் பதிவில் மோகன்லால் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… Dhurandar 2: வசூலில் பட்டையை கிளப்பும் துரந்தர் 2.. தமிழகத்தில் எழுந்த சர்ச்சை என்ன தெரியும்?
மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The past never stays silent…it only waits.
Georgekutty arrives, May 21st 2026.#Drishyam3 | Worldwide Release @jeethu4ever @antonypbvr @KumarMangat @jayantilalgada @AbhishekPathakk #MeenaSagar @aashirvadcine @PanoramaMovies @PenMovies @ram_rampagepix @Rajeshmenon1969… pic.twitter.com/2r8KCVe98U
— Mohanlal (@Mohanlal) March 23, 2026
Also Read… Ajith Kumar: அஜித் குமாரின் AK64 படத்தின் நிலை என்ன? லேட்டஸ்ட் அப்டேட்!