ஜெயிலர் 2 படத்தின் இன்டர்வல் ப்ளாக் வேற லெவலில் இருக்கும் – நடிகை மிர்ணா ஓபன் டாக்

Actress Mirnaa talks about Jailer 2 Movie: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் இடைவேளை காட்சி குறித்து படத்தில் நடித்துள்ள மிர்ணா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தின் இன்டர்வல் ப்ளாக் வேற லெவலில் இருக்கும் - நடிகை மிர்ணா ஓபன் டாக்

ரஜினிகாந்த் உடன் நடிகை மிர்ணா

Published: 

19 Mar 2026 15:26 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் பட்டதாரி. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை மிர்ணா. தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகை மிர்ணா ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் படஙக்ளில் நடித்து வந்தாலும் அவரது கதாப்பாத்திரங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ஜெயிலர் என்ற படத்தில் நடித்த பிறகே மிர்ணா ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் ரஜினிகாந்தின் மருமகளாக மிர்ணா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடித்த பிறகு நடிகை மிர்ணா தென்னிந்திய அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மிர்ணா ஜெயிலர் 2 படம் குறித்த அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜெயிலர் 2 படம் குறித்து நடிகை மிர்ணா கொடுத்த சூப்பர் அப்டேட்:

‘ஜெயிலர் பாகம் 1’ படத்தின் நேர்காணலின் போது, ​​”அது ‘முன்னெப்போதும் இல்லாத, பின்னெப்போதும் நிகழாத’ வகையிலான ஒரு இடைவேளைக் காட்சியாக (interval block) அமைந்திருந்தது,” என்று நான் குறிப்பிட்டிருந்தேன். முதல் பாகத்தின் நிலைமை அவ்வாறு இருந்ததென்றால், இரண்டாம் பாகத்தின் இடைவேளைக் காட்சி எந்தத் தரத்தில் அமைந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

படப்பிடிப்புத் தளத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நான் முதன்முறையாகக் கண்டபோது, ​​’படையப்பா’ திரைப்படத்தில் வரும் “உங்களுக்கு வயதானாலும்… உங்கள் ஸ்டைலும் அழகும் அப்படியே இருக்கின்றன” என்ற வசனம் என் நினைவுக்கு வந்தது. அதே ஆற்றல், அதே பாணி! அவர் எத்தணை அற்புதமான ஒரு மனிதர் என்று மிர்ணா தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… யூத் முதல் ஆடு 3 வரை… தென்னிந்திய சினிமாவில் நாளை திரையரங்குகளில் வரிசைக்கட்டும் படங்கள் – லிஸ்ட் இதோ

இணையத்தில் வைரலாகும் மிர்ணா பேச்சு:

Also Read… யோகி பாபுவின் 300-வது படமான அர்ஜுனன் பேர் பத்து படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி