அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்… இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மீனாட்சி சௌத்ரியின் போட்டோஸ்!
Actress Meenakshi Chaudhary: இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன நடிகை மீனாட்சி சௌத்ரி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

மீனாட்சி சௌத்ரி
இந்தி சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி இயக்குநர் உதய் சிங் பவார் இயக்கத்தில் வெளியான படம் அப்ஸ்டார்ட்ஸ். இந்தப் படத்தில் பிரியான்ஷு பைன்யுலி, சந்திரச்சூர் ராய் மற்றும் ஷதாப் கமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். மேலும் நடிகை மீனாட்சி சௌத்ரி (Actress Meenakshi Chaudhary) இதில் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் மீனாட்சி சௌத்ரி. இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன மீனாட்சி சௌத்ரி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி தெலுங்கு சினிமாவில் வெளியான இச்சாத வாகனமுலு நிலுபரடு என்ற படத்தின் மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை மீனாட்சி சௌத்ரி. நடிகர் சுஷாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தை இயக்குநர் தர்ஷன் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிகர் அதிவி சேஷ் நடிப்பில் வெளியான ஹிட் தி செகண்ட் கேஸ் படத்தில் நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்து இருந்தார். இயக்குநர் சைலேஸ் கொலனு எழுதி இயக்கி இருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி வெளியான கொலை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் நடிகை மீனாட்சி சௌத்ரி. இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி கே குமார் எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார் நடிகை மீனாட்சி சௌத்ரி.
இணையத்தில் கவனம் பெறும் நடிகை மீனாட்சி சௌத்ரியின் போட்டோஸ்:
தொடர்ந்து தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் இருதியாக வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகர் துல்கர் சல்மன் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி கலக்கி இருப்பார். இந்தப் படம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை மீனாட்சி சௌத்ரி தற்போது டோக்கியோவிற்கு வெக்கேஷனுக்காக சென்றுள்ளார். அதன்படி வெக்கேஷனின் நடிகை மீனாட்சி சௌத்ரி எடுத்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை மீனாட்சி சௌத்ரியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்:
Also Read… நாட்டாமை பட மிக்சர் கேரக்டர் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் கலகல பேச்சு!