உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் மார்ஷல் படம் – வைரலாகும் தகவல்
Marshal Movie Update : நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது அடுத்தடுத்தடுத்தப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் மார்ஷல் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மார்ஷல் படம்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி (Actor Karthi). கிராமத்து இளைஞனாக சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது சிட்டி பாய் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ்கு பிடித்த நாயகனாக நடிகர் கார்த்தி இருக்கிறார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் விமர்ச்ன ரீதியாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வா வாத்தியார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் சர்தார் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படங்களில் பிசியாக நடித்து வரும் போதே அடுத்ததாக மார்ஷல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகர் கார்த்தி. இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கிய நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் மார்ஷல் படம்:
அதன்படி நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் கார்த்தியின் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, ஓடிடி உரிமைகள் ஏற்கனவே மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளன. மேலும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கவிருந்த வேடத்தில் இப்போது வேறொரு நடிகர் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது.
மேலும் ராமேஸ்வரத்தில் விரைவில் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படம் கடல் கொள்ளையர்களை மையமாகக் கொண்டு இரண்டு பகுதிகளாகத் தயாரிக்கப்படும் என்றும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கார்த்தியின் நடிப்பில் ஒரு பிரமாண்டமான படம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read… மீண்டும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ் – ஹீரோ யார் தெரியுமா?
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Karthi’s “#Marshal” Movie Update 💥
— Even before the shooting of Karthi’s “Marshal” begins, the OTT rights have already been sold for a huge amount. 🎬💰
— #Vadivelu is not part of the film — the role he was supposed to play will now be done by another actor. 🎭
— The shooting… pic.twitter.com/wsqRPo2MrD— Movie Tamil (@_MovieTamil) November 2, 2025
Also Read… தனுஷின் 55-வது படம் எப்படி இருக்கும்? இணையத்தில் கசிந்த தகவல்